அன்பில் பெரியசாமி
இந்திய அரசியல்வாதி
அன்பில் பெரியசாமி (Anbil Periyasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் மகனும் அன்பில் பொய்யாமொழியின் இளைய சகோதரரும் ஆவார்.[1] திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிராப்பட்டியினை சார்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் திருச்சிராப்பள்ளி-II தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1999/2000 மற்றும் 2001 தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மீண்டும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி I தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CM announces candidates for two seats". The Hindu. 29 January 2000 இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041129201921/http://www.hinduonnet.com/thehindu/2000/01/29/stories/04292232.htm.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "ANBIL PERIASAMY(DMK):Constituency- Tiruchirapalli-I(Tiruchirappalli) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.