புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2011

13 ஏப்ரல் 2011 அன்று இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.[1]

2011 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

← 2006 13 ஏப்ரல் 2011 (2011-04-13) 2016 →

30
16 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்86.19%
  First party Second party
 
தலைவர் ந. ரங்கசாமி வெ. வைத்தியலிங்கம்
கட்சி அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் காங்கிரசு
தலைவரான
ஆண்டு
7 பிப்ரவரி 2011 4 செப்டம்பர் 2008
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
இந்திரா நகர்
முந்தைய
தேர்தல்
புதிது 10
முன்பிருந்த தொகுதிகள் புதிது 10
வென்ற
தொகுதிகள்
15 7
மாற்றம் 15 3
விழுக்காடு 31.75% 25.06%


முந்தைய முதலமைச்சர்

வெ. வைத்தியலிங்கம்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

ந. ரங்கசாமி
அகில இந்திய என் ஆர் காங்கிரசு

வேட்பாளர்கள் தொகு

26 மார்ச் 2011 தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை முடிக்கக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 30 மார்ச் 2011 வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.[1] மொத்தத்தில், 187 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். யானம் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக பத்து வேட்பாளர்கள் போட்டியிலிருந்தனர். இந்திரா நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி (கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டார், பிரதேச வரலாற்றில் முதல் முறையாக ஒரு வேட்பாளர் இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்) மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளர் ஏ.கே.டி ஆரோமொகம் என் இருவர் மட்டுமே போட்டியிட்டனர்.[2] வாக்கு எண்ணிக்கை 13 மே 2011 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரச்சாரம் தொகு

போட்டியிடும் கட்சிகளில், இரண்டு பெரிய கூட்டணிகள் இருந்தன. ஒருபுறம், தற்போதைய முதலமைச்சர் வெ. வைத்திலிங்கத்தை ஆதரிக்கும் கூட்டணி இருந்தது. இதில் இந்தியத் தேசிய காங்கிரசு (17 இடங்கள்) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் (10 இடங்கள்), பாட்டாளி மக்கள் கட்சி (2 இடங்கள்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (1 இடம்) போட்டியிட்டன. தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு முக்கிய கூட்டணி என்.ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் (17 இடங்கள்), அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (10 இடங்கள்), இந்தியப் பொதுவுடைம கட்சி (மார்க்சிஸ்ட்) (1 இடம் ), இந்திய பொதுவுடைமைக் கட்சி (1 இடம்) மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (1 இடம்). மூன்றாவது அணியாக பாரதிய ஜனதா கட்சி தனியாக 20 இடங்களில் போட்டியிட்டது. சுயேச்சை வேட்பாளர்களாக 78 பேர் களத்திலிருந்தனர்.[2]

பிரச்சாரத்தில் பல உயர்மட்ட தேசிய அரசியல்வாதிகள் பங்கேற்றனர். இவர்களில் முக்கியமானவர்கள்: சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்), ராகுல் காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்), பிரணாப் முகர்ஜி (இந்திய தேசிய காங்கிரஸ் மத்திய அமைச்சர்), நிதின் கட்கரி (பாஜக தலைவர்), சுஷ்மா சுவராஜ் (பாஜக எம்.பி), வெங்கையா நாயுடு (முன்னாள் பாஜக தலைவர்), மு. கருணாநிதி (திமுக, முதலமைச்சர் தமிழ்நாடு ), ஜெ. ஜெயலலிதா (அஇஅதிமுக பொதுச் செயலாளர்) மற்றும் விஜயகாந்த் (தே.மு.தி.க தலைவர்).[2]

கட்சிகளும் கூட்டணிகளும் தொகு

காங்கிரசு கூட்டணி தொகு

கட்சி சின்னம் தொகுதி பங்கீடு
இந்திய தேசிய காங்கிரசு இதேகா   17
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக   10
பாட்டாளி மக்கள் கட்சி பாமக   2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக   1

என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொகு

கட்சி சின்னம் தொகுதி பங்கீடு
அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் என்.ஆர் காங்கிரஸ் 17
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக   10
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக   1
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ   1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம்   1


தனித்து தேர்தல் கலத்தில் நிற்கும் கட்சிகள் தொகு

கட்சி சின்னம் தொகுதி பங்கீடு
பாரதிய ஜனதா கட்சி பாஜக   20

தேர்தல் தொகு

810,000 மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.[2]

முடிவுகள் தொகு

கட்சிகள் மற்றும் கூட்டணிகள் வாக்குகள் வாக்குகள் % போட்டியிட்டது வென்றது மாற்றம்
1 அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 2,21,552 31.75 17 15  15
2 இந்திய தேசிய காங்கிரசு 1,85,149 26.53 17 7   3
3 அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 95,960 13.75 10 5  2
4 திராவிட முன்னேற்ற கழகம் 74,552 10.68 10 2   5
5 பாட்டாளி மக்கள் கட்சி 17,342 2.48 2 0   2
6 பாரதிய ஜனதா கட்சி 9,183 1.32 20 0  
7 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 7,840 1.12 2 0  
8 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6,541 0.94 1 0   1
9 சுயேச்சைகள் 70,595 10.12 79 1   2
மொத்தம் 6,97,900 100.0 30


தொகுதியின் முடிவுகள் தொகு

முடிவுகள்
தொகுதி வெற்றிபெற்றவர் இரண்டாமிடம் வித்தியாசம்
# பெயர் வேட்பாளர் கட்சி வாக்குகள் வேட்பாளர் கட்சி வாக்குகள்
Puducherry District
1 மண்ணாடிப்பட்டு டி.பி.ஆர்.செல்வம் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 12412 கே.பி.கே.அருள் முருகன் பாட்டாளி மக்கள் கட்சி 7696 4716
2 திருபுவனை பி. அகாளன் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 13733 கே. ஜெயராஜ் இந்திய தேசிய காங்கிரசு 8965 4768
3 ஊசுடு பி. கார்த்திகேயன் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 13327 ஏ. ஏழுமலை திராவிட முன்னேற்ற கழகம் 8169 5158
4 மங்கலம் C.Djeacoumar இந்திய தேசிய காங்கிரசு 14052 பி. ஆனந்தபாசுகரன் அகில இந்திய என். ஆர். காங்கிரசு 11759 2293
5 வில்லியனூர் ஏ. நமச்சிவாயம் இந்திய தேசிய காங்கிரசு 13105 கே. நடராஜன் அகில இந்திய என். ஆர். காங்கிரசு 11564 1541
6 உழவர்கரை என் ஜி பன்னீர்செல்வம் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 9071 ஏ.என்.பாலன் சுயேட்சை 7505 1566
7 கதிர்காமம் ந. ரங்கசமி அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 16323 வி.பெத்தபெருமாள் இந்திய தேசிய காங்கிரசு 6566 9757
8 இந்திராநகர் ந. ரங்கசாமி அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 20685 வி.ஆறுமுகம் இந்திய தேசிய காங்கிரசு 4008 16677
9 தட்டாஞ்சாவடி அசோக் ஆனந்த் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 14597 என்.அர்ஜீனன் சுயேட்சை 4091 10506
10 காமராஜ் நகர் வெ. வைத்தியலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 12570 Nara. Kalainathan இந்திய பொதுவுடைமைக் கட்சி 6541 6029
11 லாஸ்பேட்டை எம். வைத்திஆனந்தன் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 10189 வி.பி.சிவக்கொழுந்து இந்திய தேசிய காங்கிரசு 4757 5432
12 காலாப்பட்டு பிஎமெல். கல்யாணசுந்தரம் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 14132 எம். ஒ. எச். எப். ஷாஜகான் இந்திய தேசிய காங்கிரசு 7766 6366
13 முத்தையால்பேட்டை நந்தா டி சரவணன் திராவிட முன்னேற்ற கழகம் 10364 ஏ. காசிலிங்கம் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 7388 2976
14 ராஜ் பவன் கே. லெட்சுமிநாராயணன் இந்திய தேசிய காங்கிரசு 11398 எம். சரவணக்குமார் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 4327 7071
15 உப்பளம் ஏ. அன்பழகன் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 9536 பஸ்ஸி என். ஆனந்த் சுயேட்சை 6332 3204
16 உருளையான்பேட்டை ஜி. நேரு அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 10986 ஆர். சிவா திராவிட முன்னேற்ற கழகம் 8368 2618
17 நெல்லித்தோப்பு ஓம் சக்தி சேகர் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 13301 ஆர். வி. ஜானகிராமன் திராவிட முன்னேற்ற கழகம் 8783 4518
18 முதலியார்பேட்டை ஏ. பாஸ்கர் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 17016 எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் திராவிட முன்னேற்ற கழகம் 7289 9727
19 அரியாங்குப்பம் வி. சபாபதி அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 13381 T. Djeamourthy இந்திய தேசிய காங்கிரசு 10750 2631
20 மணவெளி பி. புருசோத்தமன் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 13979 ஆர்.கே.ஆர். அனந்தராமன் பாட்டாளி மக்கள் கட்சி 9646 4333
21 எம்பலம் பி. ராஜவேலு அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 12933 எம். கந்தசாமி இந்திய தேசிய காங்கிரசு 11465 1468
22 நெட்டப்பாக்கம் எல். பெரியசாமி அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 14686 எஸ். முத்துகுமாரசாமி இந்திய தேசிய காங்கிரசு 9219 5467
23 பாகூர் டி. தியாகராஜன் அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 12284 ரா. ராதகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு 10229 2055
Karaikal District
24 நெடுங்காடு எம். சந்திரகாசு அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 12474 ஏ. மாரிமுத்து சுயேட்சை 4984 7490
25 திருநள்ளாறு பி. ஆர். சிவார அகில இந்திய என்.ஆர் காங்கிரசு 11702 ஆர். கமலக்கண்ணன் இந்திய தேசிய காங்கிரசு 10862 840
26 காரைக்கால் வடக்கு பி.ஆர். என். திருமுருகன் இந்திய தேசிய காங்கிரசு 12155 எம்வி ஒமலிங்கம் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 8795 3360
27 காரைக்கால் தெற்கு ஏ. எம். எச். நாஜிம் திராவிட முன்னேற்ற கழகம் 8377 விகே. கணபதி சுயேட்சை 6801 1576
28 நிரவி திருமலைராயன் பட்டினம் வி.எம்.சி.சிவகுமார் சுயேச்சை 8860 ஆனந்தன் கீதா திராவிட முன்னேற்ற கழகம் 8502 358
Mahe District
29 மாகே ஈ. வல்சராஜ் இந்திய தேசிய காங்கிரசு 13297 டிகே கஜேந்திரன் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) 7193 6104
Yanam District
30 யானம் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திய தேசிய காங்கிரசு 23985 மாஞல சத்ய சாய் குமார் அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் 4867 19118

மேற்கோள்கள் தொகு