முதன்மை பட்டியைத் திறக்கவும்
புவியியல்படி, புதுச்சேரி மாவட்டம் மிகவும் சிதறிய நிலப்பகுதியாகும்.

புதுச்சேரி மாவட்டம் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி மாவடம் 290 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 735,332 ஆகும்.[1]

நிர்வாகக் கோட்டங்கள்தொகு

நிர்வாக நோக்கங்களுக்காக புதுச்சேரி ஒன்றியப் பகுதி எட்டு தாலுக்காக்களாக (வட்டங்களாக) பிரிக்கப்பட்டுள்ளது.[2] இவற்றில் நான்கு, அதாவது, புதுச்சேரி, ஒழுக்கரை, வில்லியனூர் மற்றும் பகூர், இணைந்து புதுச்சேரி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.[2] இந்த நான்கில், ஒழுக்கரை வட்டத்தில் ஊரகப் பகுதிகள் எதுவும் இல்லை.[3] மற்ற மூன்று வட்டங்களின் ஊரகப் பகுதிகள் மேலும் கம்யூன் பஞ்சாயத்துக்கள் (CP) அல்லது கம்யூன்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வட்டத்தின் ஊரகப் பகுதிகள் ஒரே கம்யூனாக, அரியாங்குப்பம் கம்யூனாக உள்ளன. வில்லியனூர் வட்டத்தில் இரண்டு கம்யூன்கள் உள்ளன: வில்லியனூர் கம்யூன், மண்ணடிப்பேட்டை கம்யூன். பகூரில் உள்ள இரு கம்யூன்கள் பகூரும் நெட்டப்பாக்கமும் ஆகும்.[3]

2011 கணக்கெடுப்பு ஏற்கனவே உள்ள மூன்று நகரங்களைத் தவிர மூன்று பகுதிகளை நகரங்களாக கண்டறிந்துள்ளது.[3] புதுச்சேரி மற்றும் ஒழுக்கரை இரண்டும் நகராட்சிகளாகும். குரும்பப்பேட்டை ஒரு சிற்றூர் பஞ்சாயத்தாகும். கணக்கெடுப்பின்படியான நகரங்கள்; அரியாங்குப்பம், மனவெலி, மற்றும் வில்லியனூராகும்.[4] புதுச்சேரி நகர்ப்புறத் திரள் இந்த ஆறு நகரப்பகுதிகளையும் ஓடியம்பேட்டையையும் உள்ளடக்கியது.[4]

நிர்வாக வசதிக்காக, புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, புதுச்சேரி மாவட்டத்தை இரு உட்கோட்டங்களாகப் பிரித்துள்ளது: புதுச்சேரி வடக்கு மற்றும் புதுச்சேரி தெற்கு.[5] புதுச்சேரி வடக்கு உட்கோட்டத்தில் புதுச்சேரி மற்றும் ஒழுக்கரை வட்டங்கள் உள்ளன. புதுச்சேரி தெற்கு உட்கோட்டத்தில் மற்ற இரு வட்டங்களான வில்லியனூரும் பகூரும் உள்ளன.[6] இந்த நான்கு வட்டங்களும் மேற்படியாக வருவாய்த்துறை வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்தொகு

  1. "Know India - Districts of India - Pondicherry". india.gov.in - The National Portal of India. பார்த்த நாள் 23 March 2010.
  2. 2.0 2.1 "Literacy Rates by Residence and Sex - U.T. District and Taluk – 2011" (PDF). 2011 census of India. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2013.
  3. 3.0 3.1 3.2 "Chapter 1 (Introduction)" (PDF) 4,5. 2011 census of India. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2013.
  4. 4.0 4.1 "Chapter 4 (Trends in Urbanisation)" (PDF) 26, 27. 2011 census of India. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2013.
  5. "Right to Information Act Manual, Manual 2" (PDF). Department of Revenue and Disaster Management, Government of Puducherry. பார்த்த நாள் 4 பெப்ரவரி 2013.
  6. "Right to Information Act Manual, Manual 1" (PDF). Department of Revenue and Disaster Management, Government of Puducherry. பார்த்த நாள் 4 பெப்ரவரி 2013.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_மாவட்டம்&oldid=1869321" இருந்து மீள்விக்கப்பட்டது