ஆர். வி. ஜானகிராமன்

ஆர். வி. ஜானகிராமன் (R. V. Janakiraman, 08 சனவரி 1941 - 10 சூன் 2019) என்பவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி மாநில முதலமைச்சராக மே 26, 1996 முதல் மார்ச் 18, 2000 வரை பணியாற்றினார். இவர் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில், ஏழு முறை போட்டியிட்டு, ஐந்து முறை புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆர். வி. ஜானகிராமன்
புதுச்சேரி முதலமைச்சர்
பதவியில்
மார்ச் 26, 1996 – 18 மார்ச் 2000
முன்னையவர்வெ. வைத்தியலிங்கம்
பின்னவர்ப. சண்முகம்
தொகுதிநெல்லித்தோப்பு
எதிர்கட்சி தலைவர்
பதவியில்
மே, 2001 – மார்ச், 2006
தொகுதிநெல்லித்தோப்பு
பொதுப்பணித் துறை அமைச்சர்
பதவியில்
1989–1991
தொகுதிநெல்லித்தோப்பு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-01-08)8 சனவரி 1941
வில்லியனூர், புதுச்சேரி
இறப்பு10 சூன் 2019(2019-06-10) (அகவை 78)
புதுச்சேரி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)புதுச்சேரி, இந்தியா
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கை வரலாறு

தொகு

இவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த ஆலந்தூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கருணாநிதியிடம் பணிக்கு சேர்ந்தார்.[2] இதைத் தொடர்ந்து 1985இல் நெல்லித்தோப்புத் தொகுதியில் போட்டியிட்டு, வென்று முதன்முறையாக புதுச்சேரி சட்டமன்றத்தில் நுழைந்தார். 1988இல் புதுச்சேரி மாநில திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1990இல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். பின்னர் 1996 முதல் 2000வரை புதுச்சேரி மாநில முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். மேலும் இவர் சட்டப்பேரவை கொறடா, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மாநில திமுக அமைப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.[3]

போட்டியிட்ட தேர்தல்கள்

தொகு
ஆண்டு பதவி தொகுதி கட்சி முடிவு
1985 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக வெற்றி
1990 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக வெற்றி
1991 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக வெற்றி
1996 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக வெற்றி
2001 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக வெற்றி
2006 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக தோல்வி
2011 ச.ம.உ நெல்லித்தோப்பு திமுக தோல்வி

மேற்கோள்கள்

தொகு
  1. "புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்; முதல் அமைச்சர் அஞ்சலி". தினத்தந்தி (சூன் 10, 2019)
  2. "States of India since 1947 - Puducherry (Pondicherry)".
  3. "புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தனியார் மருத்துவமனையில் காலமானார் அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம்". செய்தி. இந்து தமிழ். 11 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வி._ஜானகிராமன்&oldid=3576546" இலிருந்து மீள்விக்கப்பட்டது