பத்தாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் பத்தாவது மக்களவை 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இவர்கள் 1991 மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையாகும்.[1]

பத்தாவது மக்களவை
ஒன்பதாவது மக்களவை பதினொராவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1991

இந்திய தேசிய காங்கிரசின் பி. வி. நரசிம்ம ராவ் 21 ஜூன் 1991 முதல் 16 மே 1996 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு 244 இடங்களை வென்றது. இது முந்தைய 9வது மக்களவையில் இ. தே. கா. பெற்ற எண்ணிக்கையினை விட 47 பேர் அதிகம்.

இதனையடுத்து 11வது மக்களவை 1996 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 15 மே 1996 அன்று அமைக்கப்பட்டது.

முக்கிய உறுப்பினர்கள் தொகு

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. சிவ்ராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவர் ஜூலை 10, 1991 - மே 22, 1996
2. சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா மக்களவைத் துணைத் தலைவர் ஆகஸ்டு 13, 1991 - மே 10, 1996
3. கே. சி. இரசுதோகி பொதுச்செயலர் சூன் 20, 1991 - திசம்பர் 31, 1991
4. சி. கே. ஜெயின் பொதுச்செயலர் சனவரி 1, 1992 - மே 31, 1994
5. ஆர். சி. பரத்வாஜ் பொதுச்செயலர் மே 31, 1994 - திசம்பர் 31, 1995
6. எஸ். என். மிசுரா பொதுச்செயலர் சனவரி 1, 1996 - மே 10, 1996

கட்சி வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

10ஆவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வ. எண் கட்சி எண்ணிக்கை
1 இந்திய தேசிய காங்கிரசு 252
2 பாரதிய ஜனதா கட்சி 121
3 ஜனதா தளம் 63
4 இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 36
5 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 14
6 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12
7 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 7
8 தெலுங்கு தேசம் கட்சி 7
9 தெலுங்கு தேசம் (வி) 6
10 புரட்சிகர சோசலிசக் கட்சி 5
11 ஜனதா கட்சி 4
12 சிவ சேனா 4
13 பகுஜன் சமாஜ் கட்சி 3
14 பார்வார்டு பிளாக்கு 3
15 நியமன உறுப்பினர்கள் 3
16 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2
17 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 1
18 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 1
19 அசாம் கன பரிசத் 1
20 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை 1
21 இந்திய காங்கிரசு (சோசலிசம்)]] 1
22 இந்திய தேசிய காங்கிரசு (Congress) 1
23 அரியானா முன்னேற்றக் கட்சி 1
24 சுயேச்சை (அரசியல்) 1
25 கேரளா காங்கிரசு 1
26 மணிப்பூர் மக்கள் கட்சி 1
27 என். பி. சி. 1
28 சமதா கட்சி 1
29 சிக்கிம் சன்ங்ராம் பரிசாத் 1

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாவது_மக்களவை&oldid=3373376" இருந்து மீள்விக்கப்பட்டது