சிவ சேனா
சிவசேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்[1][2]. மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் வில் - அம்பு ஆகும்.
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் 2014 மகாராட்டிர சட்டமன்ற தேர்தல் சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது[3][4] 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள்.[5] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது.[6]
- 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர்கள்தொகு
முதலமைச்சர் | படம் | ஆட்சிக்காலம் | நாட்கள் | இதர பதவிகள் |
---|---|---|---|---|
மனோகர் ஜோஷி | 14.03.1995 - 31.01.1999 | 1419 நாட்கள் | இந்திய மக்களவைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் | |
நாராயன் ரானே | 01.02.1999 - 17.10.1999 | 258 நாட்கள் | வருவாய்த்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் | |
உத்தவ் தாக்கரே | 28.11.2019 - | 421 நாட்கள் | சிவசேனா தலைவர், சாமனா பத்திரிகை ஆசிரியர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "சிவசேனை தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு". தினமணி. பார்த்த நாள் 6 பெப்ரவரி 2014.
- ↑ "சிவசேனைத் தலைவராக உத்தவ் பொறுப்பேற்பு: பெண்கள் பாதுகாப்புக்கு மடக்குக் கத்தி விநியோகம்!". தினமணி. பார்த்த நாள் 6 பெப்ரவரி 2014.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight
- ↑ http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends
- ↑ http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail
- ↑ http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in