சிவ சேனை (திரைப்படம்)
சிவ சேனை என்பது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முழுநீள அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2014 பெப்ரவரி 28 இல் இலண்டனில் வெளியானது. என். ராதா (நாகரத்தினம் ராதா) இதனை இயக்கித் தயாரித்துள்ளார். ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராகம் புரொடக்சன்சு இதனை வெளியிட்டுள்ளது.
நடிகர்கள்
தொகுஇப்படத்தில் கதாநாயகனாக சுஜித், இரண்டு கதாநாயகிகளாக தர்ஷியா, அனுசுயா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி, என்.ராதா ஆகியோர் நடித்துள்ளனர்.
வெளி இணைப்புகள்
தொகு- ஐரோப்பிய தமிழர் தயாரித்து, இயக்கம் 'சிவசேனை' பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், சென்னை ஒன்லைன்
- சிவ சேனை[தொடர்பிழந்த இணைப்பு]