இந்திய மக்களவைத் தலைவர்

இந்திய மக்களவைத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையை நடத்தும் தலைவரைக் குறிப்பதாகும். மூன்றாம் உலக நாடுகளில் (வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்) உள்ள பேரவைகளில் பயன்படுத்தப்படும் சொல்லையே இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகின்றது.

மக்களவை அவைத்தலைவர்
தற்போது
ஓம் பிர்லா

19 சூன் 2019 முதல்
நியமிப்பவர்மக்களவை உறுப்பினர்கள்
பதவிக் காலம்மக்களவையின் ஆயுட்காலம் வரை (5 வருடங்கள்)
உருவாக்கம்15 மே 1952
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.

மக்களவைத் தலைவரின் அதிகாரங்கள்

தொகு

மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.

மசோதா

மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.

தீர்மானங்கள்

தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தேர்தல்

மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.

மக்களவைத் தலைவர்கள்

தொகு
எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு போட்டியிட்டக் கட்சி
1. கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் மே 15, 1952 பெப்ரவரி 27, 1956 இ.தே.கா
2. எம்.ஏ, அய்யங்கார் மார்ச் 8, 1956 ஏப்ரல் 16, 1962 இ.தே.கா
3. சர்தார் உக்கம் சிங் ஏப்ரல் 17, 1962 மார்ச் 16, 1967 இ.தே.கா
4. என். சஞ்சீவ ரெட்டி மார்ச் 17, 1967 ஜூலை 19, 1969 இ.தே.கா
5. ஜி.எஸ். தில்லான் ஆகஸ்டு 8, 1969 டிசம்பர் 1, 1975 இ.தே.கா
6. பலி ராம் பகத் ஜனவரி 15, 1976 மார்ச் 25, 1977 இ.தே.கா
7. என். சஞ்சீவ ரெட்டி மார்ச் 26, 1977 ஜூலை 13, 1977 ஜனதா கட்சி
8. கே.எஸ். எக்டே ஜூலை 21, 1977 ஜனவரி 21, 1980 ஜனதா கட்சி
9. பல்ராம் சாக்கர் ஜனவரி 22, 1980 டிசம்பர் 18, 1989 இ.தே.கா
10. ரபி ராய் டிசம்பர் 19, 1989 ஜூலை 9, 1991 ஜனதா தளம்
11. சிவராஜ் பாட்டீல் ஜூலை 10, 1991 மே 22, 1996 இ.தே.கா
12. பி. ஏ. சங்மா மே 25, 1996 மார்ச் 23, 1998 இ.தே.கா
13. ஜி.எம்.சி. பாலயோகி மார்ச் 24, 1998 மார்ச் 3, 2002 தெலுங்கு தேசம்
14. மனோகர் ஜோஷி மே 10, 2002 ஜூன் 2, 2004 சிவசேனா
15. சோம்நாத் சட்டர்ஜி ஜூன் 4, 2004 மே 31, 2009 இ.பொ.க.(மா)
16. மீரா குமார் ஜூன் 1, 2009 மே 6 , 2014 இ.தே.கா
16. சுமித்ரா மகாஜன் மே 6 , 2014 மே, 29, 2019 பாரதிய ஜனதா கட்சி
17. ஓம் பிர்லா சூன் 19 , 2019 கடமையாற்றுபவர் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மக்களவைத்_தலைவர்&oldid=3539722" இலிருந்து மீள்விக்கப்பட்டது