ஓம் பிர்லா

இந்திய அரசியல்வாதி

ஓம் பிர்லா (Om Birla) (பிறப்பு: 23 நவம்பர் 1962), பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கும் மற்றும் 2019-இல் பதினேழாவது மக்களவைக்கும் தொடர்ந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஓம் பிர்லா
Om Birla Member of Parliament Rajasthan India.jpg
இந்திய மக்களவைத் தலைவர் பதினேழாவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 சூன் 2019
முன்னவர் சுமித்ரா மகாஜன்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
முன்னவர் ஜெயராஜ் சிங்
தொகுதி கோட்டா மக்களவைத் தொகுதி, இராஜஸ்தான்
தனிநபர் தகவல்
பிறப்பு ஓம் பிர்லா
23 நவம்பர் 1962 (1962-11-23) (அகவை 59)
கோட்டா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அமிதா பிர்லா
இருப்பிடம் கோட்டா, இராஜஸ்தான்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

மக்களவைத் தலைவராகதொகு

இவர் 19 மே 2019 அன்று பதினேழாவது மக்களவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை, இராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிர்லா&oldid=2970993" இருந்து மீள்விக்கப்பட்டது