சுமித்ரா மகஜன்
இந்திய அரசியல்வாதி
சுமித்திரா மகஜன் (Sumitra Mahajan, 12 ஏப்ரல் 1943) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.[1] 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.[2] மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[3] 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.
சுமித்ரா மகஜன் | |
---|---|
இந்திய மக்களவைத் தலைவர் | |
பதவியில் 05 ஜூன் 2014 – 17 ஜூன் 2019 | |
முன்னையவர் | மீரா குமார் |
பின்னவர் | ஓம் பிர்லா |
நாடாளுமன்ற உறுப்பினர் இந்தோர் | |
பதவியில் 1989 – 29 மே 2019 | |
முன்னையவர் | பிரகாஷ் சந்திர சேத்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1943 சிப்லுன், ரத்னகிரி மாவட்டம் |
அரசியல் கட்சி | பாஜக |
துணைவர் | ஜயந்த் மகஜன் |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம்(s) | இந்தோர், மத்தியப் பிரதேசம் |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.[4] இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு". தினகரன். 6 சூன் 2014. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
- ↑ http://daily.bhaskar.com/article/NAT-TOP-sumitra-mahajan-is-the-lady-who-scripted-history-got-her-name-recorded-in-guinne-4616589-PHO.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.