மீரா குமார்
மீரா குமார் (பிறப்பு;மார்ச் 31, 1945) இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மீரா குமாரின் தந்தை முன்னாள் துணைப் பிரதமரும் தலித் மக்களின் தலைவருமான ஜெகசீவன்ராம் ஆவார். இவருடைய தாயார் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இந்திராணி தேவி ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள்.
மீரா குமார் | |
---|---|
![]() | |
மக்களவைத் தலைவர் | |
பதவியில் 04 ஜூன் 2009 – 18 மே 2014 | |
முன்னவர் | சோம்நாத் சட்டர்ஜி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 31 மார்ச்சு 1945 பாட்னா, பீகார் |
அரசியல் கட்சி | இ.தே.கா |
வாழ்க்கை துணைவர்(கள்) | மஞ்சூல் குமார் |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
இருப்பிடம் | புது தில்லி |
As of ஜூன் 2, 2009 Source: [1] |
அரசியல் வாழ்க்கைதொகு
இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு 2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 - 2014 காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.
2014ஆம் ஆண்டு பிஹாரின் சாசாராம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் சேகடி பஸ்வானிடம் தோற்றார்[1]. 2017 ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) வின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்