பி. ஏ. சங்மா
பூர்னோ அகிடோக் சங்மா (1947-2016) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மக்களவைத் தலைவராகவும்[1] மேகாலயா முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசியவாத காங்கிரசு கட்சியின் (NCP) நிறுவனர்களில் ஒருவர். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பி. ஏ. சங்மா | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1977-1989, மே 1991 - மே 2009 | |
முன்னையவர் | சான்ஃபோர்ட் மரக் |
பின்னவர் | அகதா சங்மா |
தொகுதி | டுரா |
மேகாலயா முதலமைச்சர் | |
பதவியில் பிப்ரவரி 6, 1988 - மார்ச்சு 25, 1990 | |
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை | |
பதவியில் 1995-96 | |
மக்களவைத் தலைவர் | |
பதவியில் மே 25, 1996 - மார்ச்சு 23, 1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா | 1 செப்டம்பர் 1947
இறப்பு | 4 மார்ச்சு 2016 புது தில்லி, இந்தியா | (அகவை 68)
அரசியல் கட்சி | NPP |
துணைவர் | சோராதினி கே. சங்மா |
பிள்ளைகள் | 2 மகன், 2 மகள் |
வாழிடம் | மேற்கு காரோ மலை மாவட்டம் |
பிறப்பும் படிப்பும்
தொகுமேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பி. ஏ. சங்மா பிறந்தார். அங்குள்ள புனித அந்தோணி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்பு, திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ பட்டம் பெற்றார். பின்பு எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1973இல் இளைஞர் காங்கிரஸில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் பரிணாம வளர்ச்சி அடைந்தார். 1975 - 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார். பின்பு அக்கட்சியின் தலைவரான சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுவதை எதிர்த்து தேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
மக்களவையில்
தொகுஇந்திய மக்களவையின் 6ஆவது, 7ஆவது, 8ஆவது, 10ஆவது, 11ஆவது, 12ஆவது, 13ஆவது, 14ஆவது அவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக, மேகாலயாவின் எட்டாவது சட்டமன்றத்திற்கு மேற்கு காரோ குன்று மாவட்டத்தின் டுரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மந்திரி பதவியும், மக்களவைத் தலைவர் பதவியும்
தொகு- 1991 - 1993 - மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர்
- 1993 - 1995 - மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர்
- 1995 - 1996 - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை காபினெட் அமைச்சர்
- 1996 - 1998 - மக்களவைத் தலைவர்
2012இல் நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு திரட்டினார். இவரை ஆதரிக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் செ. செயலலிதாவும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://speakerloksabha.nic.in/frmspeaker.asp
- ↑ "List Of Members Of The Eight Megalaya Legislative Assembly". மேகாலயா சட்டமன்றம், அதிகாரப்பூர்வ இணையதளம். Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
- ↑ "Jayalalithaa, Naveen Patnaik support Sangma for President, but Pawar not enthusiastic". டைம்ஸ் ஆப் இந்தியா. மே 18, 2012. http://timesofindia.indiatimes.com/india/Jayalalithaa-Naveen-Patnaik-support-Sangma-for-President-but-Pawar-not-enthusiastic/articleshow/13217335.cms. பார்த்த நாள்: மே 18, 2012.