சில்லாங் (Shillong) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஒரு மலை வாழிட நகரம் ஆகும். மேலும் இது கிழக்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இந்நகரத்தை கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைப்பர். [3]

சில்லாங்
மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்
From top left to right: A view of Shillong, Elephant Falls, The Cathedral of Mary Help of Christians, Ward's Lake
அடைபெயர்(கள்): கிழக்கின் ஸ்காட்லாந்து
சில்லாங் is located in மேகாலயா
சில்லாங்
சில்லாங்
மேலாயாவில் சில்லாங்கின் அமைவிடம்
சில்லாங் is located in இந்தியா
சில்லாங்
சில்லாங்
சில்லாங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°34′00″N 91°53′00″E / 25.5667°N 91.8833°E / 25.5667; 91.8833
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காசி மலை
பெயர்ச்சூட்டுதேவதை
அரசு
 • நிர்வாகம்சில்லாங் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்64.36 km2 (24.85 sq mi)
ஏற்றம்
1,495−1,965 m (4,908−6,449 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்1,43,229
 • அடர்த்தி234/km2 (610/sq mi)
 • பெருநகர்
3,54,759
மொழி
 • அலுவல் மொழிஆங்கிலம்[2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
793 001 – 793 102
தொலைபேசி குறியீடு0364
வாகனப் பதிவுML-05
தட்ப வெப்பம்Oceanic climate#Subtropical highland variety (Cwb)
இணையதளம்eastkhasihills.gov.in

இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ளது. இதன் தட்ப வெப்பம் ஆண்டு முழுமைக்கும் குளிராகவே இருக்கும். [4]

பிரித்தானிய இந்தியாவில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் இருந்தது. பின்னர் 1972-இல் அசாம் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு மேகாலயா மாநிலம் உருவான போது, சில்லாங் நகரம் மேகாலாயாவின் தலைநகராக விளங்கியது.

புவியியல்

தொகு
 
கழுப்பார்வையில் சில்லாங்

சில்லாங் நகரம் 25°34′N 91°53′E / 25.57°N 91.88°E / 25.57; 91.88 பாகையில் அமைந்துள்ளது. இது சில்லாங் பீடபூமியில் அமைந்துள்ளது.[5] இந்நகரத்த்தைச் சுற்றிலும் மூன்று மலைகளால் சூழப்பபெற்றது. சில்லாங் நகரம் கவுகாத்தியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 40 வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தட்ப வெப்பம்

தொகு

இந்நகரத்தின் கோடைக்கால வெப்பம் 23 °C (73 °F) மற்றும் குளிர்கால வெப்பம் 4 °C (39 °F) ஆகும். சூன் முதல் அக்டோபர் வரை மழைக் காலம் ஆகும்.

தட்பவெப்பநிலை வரைபடம்
சில்லாங்
பெமாமேஜூஜூ்செடி
 
 
13.7
 
15
4
 
 
22.7
 
17
6
 
 
53.7
 
21
11
 
 
130.1
 
23
14
 
 
273.7
 
24
15
 
 
468.8
 
24
17
 
 
394.5
 
24
18
 
 
317.5
 
24
18
 
 
293.8
 
23
17
 
 
192.4
 
22
13
 
 
37.3
 
19
9
 
 
9.3
 
16
5
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Weather Information Service
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.5
 
60
40
 
 
0.9
 
63
44
 
 
2.1
 
70
51
 
 
5.1
 
74
57
 
 
11
 
74
60
 
 
18
 
75
63
 
 
16
 
75
64
 
 
12
 
75
64
 
 
12
 
74
62
 
 
7.6
 
71
56
 
 
1.5
 
66
48
 
 
0.4
 
61
42
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 31,025 வீடுகள் கொண்ட சில்லாங் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,43,229 ஆகும். அதில் ஆண்கள் 70,135 மற்றும் பெண்கள் 73,094 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 14,317. சராசரி எழுத்தறிவு 83.5% ஆகும். இந்நகரத்தின் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,551 மற்றும் 73,307 ஆகவுள்ளனர்.[1] இந்நகர மக்களின் கிறித்தவர்கள் 46.5%, இந்துக்கள் 42.1%, இசுலாமியர்கள் 4.5% மற்றவர்கள் 6.9% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் பல உள்ளூர் மொழிகள் பேசினாலும் ஆட்சி மொழி, கல்வி மொழி ஆங்கிலம் ஆகும்.

படக்காட்சிகள்

தொகு

கல்வி

தொகு
 
இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனம், சில்லாங்

தன்னாட்சி கல்வி நிறுவனங்கள்

தொகு
  • இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனம்
  • மேகாலயா தேசிய தொழில்நுப்ட நிறுவனம்
  • ஆடை வடிவமைப்பு தொழில்நுப்ட தேசிய நிறுவனம், சில்லாங்
  • வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம்

உயர் கல்லூரிகள்

தொகு
  • சில்லா சட்டக் கல்லூரி
  • வடகிழக்கு இந்திய இந்திராகாந்தி மண்டல சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம்
  • ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக் கழகம் (மத்தியப் பல்கலைக் கழகம்)
  • வடகிழக்கு மலைகள் பல்கலைக் கழகம் (மத்தியப் பல்கலைக் கழகம்)
Panorama of Police Bazar which is an important economic center and major commercial hub of Shillong

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India: Shillong". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Rao, Sachin. "Travel: Shillong, India – 'Scotland of the east'" (in en). The Scotsman இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170220093726/http://www.scotsman.com/news/travel-shillong-india-scotland-of-the-east-1-3481504. பார்த்த நாள்: 19 February 2017. 
  4. "Shillong | India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
  5. Bilham, R. and P. England, Plateau pop-up during the great 1897 Assam earthquake. Nature(Lond),410, 806–809, 2001

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சில்லாங்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லாங்&oldid=3357148" இலிருந்து மீள்விக்கப்பட்டது