கிழக்கு காசி மலை மாவட்டம்

மேகாலயத்தில் உள்ள மாவட்டம்

கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சில்லாங் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2752  சதுர கிலோமீட்டர் ஆகும். இது மேகாலயாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். காசி மலை மாவட்டத்தில் இருந்து பிரித்து, கிழக்கு, மேற்கு காசி மலை மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். இதில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து ரி-போய் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கிழக்கு காசி மலை மாவட்டம்
காசி மலை
கிழக்கு காசி மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்சில்லாங்
பரப்பு2,752 km2 (1,063 sq mi)
மக்கட்தொகை824,059 (2011)
படிப்பறிவு63.31%
பாலின விகிதம்1008
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-44, NH-40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள நகரங்களும் தரப்பட்டுள்ளன.

  • காடார்சினாங் லைட்குரோ - மாவுஜ்ராங்
  • மாவுகின்றி - மாவுகின்றி
  • மாவுபிலாங் - மாவுபிலாங்
  • மாவுரிங்கினெங் - மாவுரிங்கினெங்
  • மாவுசின்ராம் - மாவுசின்ராம்
  • மில்லியெம் - மில்லியெம்
  • பினவுராலா - பினவுராலா
  • செல்லா போலாகஞ்சு - சிரபுஞ்சி

மக்கள்

தொகு

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 824,059 மக்கள் வாழ்ந்தனர். மக்கள் அடர்த்தி விகிதத்தின்படி, சதுர கிலோமீட்டருக்குள் 292 மக்கள் வாழ்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 1008 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்வோரில் 84.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து

தொகு

சில்லாங்கில் இருந்து குவகாத்தி, சில்சார் நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கலாம். குவகாத்தி ரயில் நிலையத்தின் மூலமும், குவகாத்தி விமான நிலையத்தின் மூலமும் தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணிக்கலாம். நகரங்களில் சாலைப் போக்குவரத்து வசதியும் உண்டு.

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு