அகதா சங்மா

இந்திய அரசியல்வாதி

அகதா கே. சங்மா (Agatha Sangma, பிறப்பு: சூலை 24, 1980) என்பவர் இந்தியா வில் உள்ள மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி. இவர் 2009 இல் தூரா தொகுதியில் இருந்து 15வது மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி துறையின் இணை அமைச்சராக இருந்தார். இவர் இந்திய மக்களவையின் முன்னாள் சபாநாயகர் ஆன பி. ஏ. சங்மா வின் மகள் ஆவார்.

அகதா கே. சங்மா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2009 - மே 2014 மற்றும் 17 ஜூன் 2019 முதல்
முன்னையவர்பி. ஏ. சங்மா
தொகுதிதூரா
இந்தியக் குடியரசின் அமைச்சரவை, ஊரக வளர்ச்சித் துறை
பதவியில்
மே 2009 - அக்டோபர் 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1980 (1980-07-24) (அகவை 44)
புது டெல்லி, இந்தியா [1]
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரஸ் கட்சி
வாழிடம்மேற்கு கரோ மலை
முன்னாள் கல்லூரிபுனே பல்கலைக்கழகம்
நாட்டிங்காம் பல்கலைக்கழகம்
தொழில்வழக்குரைஞர்

பிறப்பு மற்றும் படிப்பு

தொகு

பி.ஏ.சங்மா விற்கும், சரோதினி கே.சங்மா விற்கும் , 1980ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி புது டெல்லியில் அகதா சங்மா பிறந்தார். இவர் வளர்ந்தது மேகாலயாவில் உள்ள மேற்கு கரோ மலை ஆகும். இவரது சகோதரர் கான்ராட் சங்மா மேகாலயாவின் எதிர்க்கட்சித் தலைவர்.[2] இவர் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சட்டம் பயின்றார். பின்பு புது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இவர் மேலும் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழலலியல் மேலாண்மை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

  • இவர் 15வது மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினராக உள்ளார். மக்களவை உறுப்பினர்களில் மிகவும் இளைய உறுப்பினர் இவர்.[4]
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி துறையின் இணை அமைச்சராக இருந்தார். அமைச்சரவையில் இவர்தான் வயதில் இளையவர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. அகதா கே. சங்க்மா இந்திய அரசு தளத்தில்
  2. Sangma meets Sonia, first time in a decade The Times of India, சூன் 2, 2009.
  3. "Sangma dynasty gains momentum in Meghalaya". Rediff.com News. April 23, 2008. http://www.rediff.com/news/2008/apr/23sangma.htm. 
  4. "Agatha K. Sangma: India's Youngest MP profile & Bio", Samaw.com, பார்க்கப்பட்ட நாள் 2009-05-25, ... Agatha K. Sangma, the youngest India's Parliamentarian from Meghalaya ... Date of Birth 24.07.1980 ...
  5. "Agatha Sangma youngest minister in Manmohan ministry", economictimes.com, 2009-05-27, பார்க்கப்பட்ட நாள் 2009-05-27, ... P A Sangma, will be the youngest minister in the Manmohan Singh cabinet ...

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதா_சங்மா&oldid=3651410" இலிருந்து மீள்விக்கப்பட்டது