பாலாசாகேபஞ்சி சிவ சேனா
இந்திய அரசியல் கட்சி
பாலாசாஹேபஞ்சி சிவ சேனா (Balasahebanchi Shiv Sena) என்பது இந்தியாவில் 2022 இல் ஏக்நாத் சிண்டே தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு இந்து தேசியவாத அரசியல் கட்சியாகும்.[2][3] பிரதான சிவசேனாவில் இருந்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தால் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. அது இப்போது இரண்டு தனித்தனி பிரிவுகளில் ஒன்றாகும், மற்றொன்று சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே). 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக இந்த பிரிவுகள் உருவாகியுள்ளன. தற்போது இக்கட்சி மகாராட்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆளும் கட்சியாக உள்ளது .
பாலாசாஹேபஞ்சி சிவ சேனா Balasahebanchi Shiv Sena | |
---|---|
சுருக்கக்குறி | BSS |
தலைவர் | ஏக்நாத் சிண்டே |
நிறுவனர் | ஏக்நாத் சிண்டே |
மக்களவைத் தலைவர் | ராகுல் செவாலி |
தொடக்கம் | 10 அக்டோபர் 2022 |
பிரிவு | சிவ சேனா |
இணைந்தது | சிவ சேனா |
கொள்கை | இந்துத்துவம்[1] |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்டது |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 13 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்டமன்றம்) | 40 / 288 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிர சட்ட மேலவை) | 0 / 78 |
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |