சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா

இந்திய அரசியல்வாதி

சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா (S. Mallikarjunaiah)(1931 - 2014) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மூன்று முறை கர்நாடகாவின் தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மல்லிகார்ஜூனையா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார்.

சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா
துணை சபாநாயகர்-மக்களவை
பதவியில்
13 ஆகத்து 1991 – 10 மே 1996
முன்னையவர்சிவ்ராஜ் பாட்டீல்
பின்னவர்சூரஜ் பான்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1991 to 2009
தொகுதிதும்கூர்
கர்நாடக சட்டப் பேரவை துணைத் தலைவர்
பதவியில்
10 ஏப்ரல் 1985 – 30 சூன் 1990
முன்னையவர்ஏ. பி. மல்லாக ரெட்டி
பின்னவர்இவரே
பதவியில்
12 சூலை 1990 – 02 சூலை 1991
முன்னையவர்இவரே
பின்னவர்போ. இரா. பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-06-26)26 சூன் 1931
தும்கூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு13 மார்ச்சு 2014(2014-03-13) (அகவை 82)
தும்கூர், கர்நாடகம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜெயதேவதம்மா
பிள்ளைகள்1 மகன், 2 மகள்கள்
வாழிடம்தும்கூர்
As of 23 செப்டம்பர், 2006
மூலம்: [2]

அரசியல்

தொகு

இவர் பத்தாவது மக்களவையில் (1991-1996) மக்களவையின் துணைச் சபாநாயகராக இருந்தார். 1991, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தும்கூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தொகுதிக்கு 1977, 1980, 1996, 1999 நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார்.[1] இவர் சட்ட மேல்சபை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, 1971 முதல் 1991 வரை ஜன சங்கம், ஜனதா கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1986 வரை பேரவையின் துணைத் தலைவராக பணியாற்றினார். ஜனசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.[2]

பிறப்பும் இறப்பும்

தொகு

1931 சூன் 26 அன்று தும்கூரில் பிறந்தார். இவர் 82 வயதில் மாரடைப்பால் 13 மார்ச் 2014 அன்று தும்கூரில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tumkur Lok Sabha Election Result - Parliamentary Constituency".
  2. [1]
  3. PTI staff (13 March) "Ex-LS Deputy Speaker Mallikarjunaiah no more," PTINews (Bangalore), 13 March 2014 captured at 16:29 IST. http://www.ptinews.com/news/4497516_Ex-LS-Deputy-Speaker-Mallikarjunaiah-no-more-.html பரணிடப்பட்டது 2014-03-13 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு