நாஞ்சில் கி. மனோகரன்

இந்திய அரசியல்வாதி

நாஞ்சில் கி. மனோகரன் (பெப்ரவரி 10, 1929 - ஆகஸ்ட் 2, 2000) தமிழக அரசியல்வாதி. இவர் மூன்று முறை தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் , நான்கு முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,மு.கருணாநிதி (தி.மு.க.) அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

நாஞ்சில் கி.மனோகரன்
நாவுக்கரசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-02-10)பெப்ரவரி 10, 1929
நாகர்கோவில், கன்னியாகுமரி(நாஞ்சில்) மாவட்டம்
இறப்புஆகத்து 2, 2000(2000-08-02) (அகவை 71)
சென்னை
அரசியல் கட்சிதி.மு.க.
துணைவர்இந்திரா
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
வாழிடம்சென்னை
As of நவம்பர் 2, 2000
மூலம்: [1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

நாஞ்சில் மனோகரன் நாகர்கோவிலில் வைத்தியர் கிருஷ்ணனுக்கு (இறப்பு:19-8-1956)[1] மகனாகப் பிறந்தார். இந்திரா என்பவரை 1960 செப்டம்பர் 11 ஆம் நாள் சி. பி. சிற்றரசு தலைமையில் திருவனந்தபுரத்தில் மணந்தார்.[2] இவர்களுக்கு கே.என்.எம்.கிருஷ்ணா, கே.என்.எம்.ஆனந்த் என்னும் இரு மகன்களும் மினி, பிந்து என்னும் இரு மகள்களும் உள்ளனர்.[3] நாகர்கோவில் ஸ்காட் கிருத்துவ கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார்.

அரசியல் வரலாறு

தொகு

நாஞ்சில் கி. மனோகரன், தனது மாணவப் பருவத்திலேயே, திராவிட இயக்கச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். அதனால், திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பின்னர், அக்கழகத்தின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக, 1962ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். தி.மு.க.தொடங்கப்பட்ட காலத்தில், பிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்தார்.[4]

சிறை

தொகு

அப்போதைய திருவிதாங்கூர் நாஞ்சில் மாவட்டத்தைச் சேர்ந்த தென்தாமரைக்குளம் என்னும் ஊரில் 144 தடையை மீறி தி.மு.க.பொதுக்கூட்டத்தை நடத்தியதால், 5-4-1952ஆம் நாள், கி.மனோகரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஒரு வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[4]

அ.தி.மு.க.வில்

தொகு

1972 ஆம் ஆண்டில் ம.கோ.இராமசந்திரன் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் தொடங்கிய பொழுது, அக்கழகத்தின் துணை பொதுச் செயலாளராக நாஞ்சில் மனோகரன் பதவி வகித்தார்.

மீண்டும் தி.மு.க.வில்

தொகு

1980 ஆம் ஆண்டில் நாஞ்சில் மனோகரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார். பின்னர், அக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார்.

தேர்தல் வரலாறு

தொகு
தேர்தல் பதவி தொகுதி வெற்றி பெற்றவர் வாக்குகள் கட்சி இரண்டாம் நிலையாளர் வாக்குகள் கட்சி முடிவு
1962 நாடாளுமன்ற உறுப்பினர் சென்னை தெற்கு நாஞ்சில் கி.மனோகரன் 1,51,917 தி.மு.க. சி.ஆர்.ராமசாமி 89,771 காங்கிரஸ் வெற்றி
1967 நாடாளுமன்ற உறுப்பினர் சென்னை வடக்கு நாஞ்சில் கி.மனோகரன் 2,27,783 தி.மு.க. எஸ்.சி.சி.ஏ.பிள்ளை 1,66,449 காங்கிரஸ் வெற்றி
1971 நாடாளுமன்ற உறுப்பினர் சென்னை வடக்கு நாஞ்சில் கி.மனோகரன் 2,45,401 தி.மு.க. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி 1,93,807 இ.தே.கா. வெற்றி
1977 சட்டமன்ற உறுப்பினர் பாளையங்கோட்டை நாஞ்சில் கி.மனோகரன் 29,146 அ.தி.மு.க. என்.சண்முகன் 15,192 காங்கிரஸ் வெற்றி
1980 சட்டமன்ற உறுப்பினர் மயிலாப்பூர் டி.கே.கபாலி 41,260 அ.தி.மு.க. நாஞ்சில் கி.மனோகரன் 37,944 தி.மு.க. இழப்பு
1984 சட்டமன்ற உறுப்பினர் புரசைவாக்கம் நாஞ்சில் கி.மனோகரன் 61,246 தி.மு.க. க.சுப்பு 56,736 அ‌.தி.மு.க. வெற்றி
1989 சட்டமன்ற உறுப்பினர் திருவல்லிக்கேணி நாஞ்சில் கி.மனோகரன் 36,414 தி.மு.க. எச். வி. ஹண்டே 26,442 அ.தி.மு.க.(ஜெ.) வெற்றி
1991 சட்டமன்ற உறுப்பினர் திருவல்லிக்கேணி முகம்மது ஆசிப் 39,028 அ.தி.மு.க. நாஞ்சில் கி.மனோகரன் 26,576 தி.மு.க. இழப்பு
1996 சட்டமன்ற உறுப்பினர் திருவல்லிக்கேணி நாஞ்சில் கி.மனோகரன் 50,401 தி.மு.க. ஏ. வகாப் 15,390 அ.தி.மு.க. வெற்றி

அமைச்சர்

தொகு

1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க. அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் அவை முன்னவராகவும் பொறுப்பு வகித்தார் [5]

சொற்பொழிவாளர்

தொகு

நாஞ்சில் மனோகரன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் சிறப்பாகப் பேசும் நாவன்மை படைத்தவர். அதனால் 'நாவுக்கரசர்' என அழைக்கப்பட்டவர்.

எழுத்தாளர்

தொகு

நாஞ்சில் மனோகரன் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவை பின்வரும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன:

  1. சுடலையின் நடுவே, ஏ.எஸ்.சிங், நியூஸ் ஏஜெண்ட், நாகர்கோவில் [6]
  2. மதுரையில் மனோகரன், ஏ.எஸ்.சிங், நியூஸ் ஏஜெண்ட், நாகர்கோவில் [6]
  3. மேடும் பள்ளமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
  4. நாஞ்சிலார் கவிதைகள், திருமாறன் நிலையம், சென்னை. 2004

இதழாளர்

தொகு
  • சென்னையிலிருந்து ம.ரா.தேவராசன் என்பவர் சிறப்பாசிரியராக இருந்து வெளியிட்ட "முன்னணி" என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.[7]
  • கே. ஏ. மதியழகன் நிறுவி, வெளியிட்ட தென்னகம் இதழுக்கு 1970ஆம் ஆண்டில் ஆசிரியராக இருந்தார்.[8]

இறப்பு

தொகு

நாஞ்சில் மனோகரன் தனது 71ஆம் அகவையில் 2000ஆம் ஆண்டு ஆகத்து முதல் நாள் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[9]

வெளியிணைப்பு

தொகு
  1. திராவிடநாடு (இதழ்) நாள்:26-8-1956, பக்கம் 17
  2. வாழ்க்கை ஒப்பந்தம் அறிவிப்பு. இனமுழக்கம் இதழ், 9-9-1960, பக்கம் 8
  3. "நாஞ்சிலார் மனைவி மறைவு, விடுதலை இதழ் 2013-05-15". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-23.
  4. 4.0 4.1 திராவிடநாடு (இதழ்) நாள்:13-4-1952, பக்கம் 5
  5. தினமணி 2013 - 07 - 28 கொண்டாட்டம் பக்.3
  6. 6.0 6.1 திராவிடநாடு (இதழ்) நாள்:5-8-1951, பக்கம் 2
  7. இனமுழக்கம், 27-1-1961, பக்.6
  8. தென்னகம், பொங்கல் மலர், 1970
  9. நாஞ்சிலார் மறைவு, இந்து இதழ் 2000-08-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_கி._மனோகரன்&oldid=4120484" இலிருந்து மீள்விக்கப்பட்டது