கே. ஏ. மதியழகன்

இந்திய அரசியல்வாதி

கே. ஏ. மதியழகன் (திசம்பர் 7, 1926 - ஆகத்து 17, 1983) என்னும் கணியூர் அருணாசலம் மதியழகன் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 1971 - 72 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். தி.மு.கவில் பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய துணையாகவும் இயக்கத்திற்கு தூணாகவும் இருந்தவர். பின்னாளில் எம்.ஜி.ஆர் தி.மு.கழகத்திலிருந்து பிரிந்தபோது அவருடன் சென்ற முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மதியழகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் தொ.ஆ. அருணாசலனாருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கே. ஏ அருணாசலம் (மறைவு 1957)[1] கே. ஏ. முருகேசன் என்னும் அண்ணனும் கே. ஏ. கிருஷ்ணசாமி என்னும் தம்பி இருந்தனர்.

திருமணம்

தொகு

கே. ஏ. மதியழகனுக்கும் ஆனைமலை ஏ.எசு.குப்புசாமி மகள் ராசசுந்தரிக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 9-9-1959ஆம் நாள் ஆனைமலை தேவி திரையரங்கில் திருமணம் நடைபெற்றது.[2]

அரசியலில்

தொகு

திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தார். அவரது தமிழ் பேச்சுத்திறமை அண்ணா, மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோருடையது போன்று தி.மு.க வளர்ச்சிக்கு வித்திட்டது. தி.மு.க பிளவுபட்டு எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியபோதும் அவருடன் இணைந்து துணை நின்றார். 1971ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அவரது எம். ஜி. ஆர் ஆதரவினைக் கருத்தில்கொண்டு ஒரே நேரத்தில் அவைத்தலைவரான அவரும் அப்போதைய துணைத்தலைவர் சீனிவாசனும் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்தது பேரவை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.[3]

இதழ்

தொகு

இவர் தென்னகம் என்னும் இதழை 1959 ஜனவரி 16ஆம் நாள் தொடங்கி ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்தார்.[4]

நூல்கள்

தொகு
  1. அறிவின் தூதர்கள், திராவிடப்பண்ணை, திருச்சி [5]
  2. நன்றி யாருக்கு?, திராவிடப்பண்ணை, திருச்சி
  3. கொங்குநாட்டுத்தீரன், புதுமைப்பிரசுரம், சென்னை, 1969 திசம்பர்
  4. டாக்டரம்மா, இ.பதிப்பு 1968, திராவிடப்பண்ணை, திருச்சி.

வெளியிணைப்பு

தொகு
  1. கே.ஏ.மதியழகன் எழுதிய கொங்குநாட்டுத்தீரன்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கே.ஏ.மதியழகன் எழுதிய டாக்டரம்மா[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

தொகு
  1. திராவிடநாடு 1-9-1957, பக்.14
  2. தென்னகம்; 4-9-1959; பக்.3
  3. பழநெடுமாறன் வலைப்பதிவு
  4. திராவிடநாடு (இதழ்), 21-12-1959, பக்.4
  5. திராவிடநாடு (இதழ்) நாள்:28-10-1951, பக்கம் 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._மதியழகன்&oldid=3943460" இலிருந்து மீள்விக்கப்பட்டது