ச. முரசொலி
ச. முரசொலி (Murasoli S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.
ச. முரசொலி | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2024 சூன் முதல் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | எஸ். எஸ். பழனிமாணிக்கம் |
தொகுதி | தஞ்சாவூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தென்னன்குடி, தஞ்சாவூர் மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | பொற்செல்வி |
பிள்ளைகள் | ஆதவன் (மகன்) |
வாழிடம் | தஞ்சாவூர் |
As of 04 சூன் 2024 |
இளமை
தொகுமுரசொலி தஞ்சாவூர் மாவட்டம் தென்னன்குடியில் பிறந்தவர். இவரது தந்தை கே. சண்முகசுந்தரம், தாய் தர்மசம்வர்த்தினி ஆவர். சண்முகசுந்தரம் 1971ஆம் ஆண்டு தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியுள்ளார். முரசொலி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளம் அறிவியல் (வேதியியல்) பட்டம் பெற்றுள்ளார்.[1] முரசொலி பெங்களூரில் உள்ள டாக்டர் இராம் மனோகர் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் முடித்துள்ளார்.[2]
அரசியல்
தொகுதஞ்சாவூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராகக் கட்சிப் பணியாற்றிய முரசொலி 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 502245 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]
தேர்தல் செயல்பாடு
தொகுபாராளுமன்றத் தேர்தல்
தொகுஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|---|---|---|
2024 | பதினெட்டாவது மக்களவை | திராவிட முன்னேற்றக் கழகம் | தஞ்சாவூர் | வெற்றி | 5,02,245 | 48.82 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections/tamil-nadu/thanjavur/candidateshow/murasoli-s-8141
- ↑ https://myneta-info.translate.goog/LokSabha2024/candidate.php?candidate_id=1451&_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
- ↑ https://www.vikatan.com/government-and-politics/info-about-thanjavur-dmk-candidate-murasoli