புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி. கொளத்தூர் (தனி), அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்தொகு

 • 1951 - கே.எம். வலதரசு - கிசான் மச்தூர் பிரசா கட்சி
 • 1957 - எப். இராமநாதன் செட்டியார் - காங்கிரசு
 • 1962 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி
 • 1967 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்)
 • 1971 - கே. வீரய்யா - திமுக
 • 1977 - வி. எசு. இழஞ்செழியன் - அதிமுக
 • 1980 - வி. என். சாமிநாதன் - காங்கிரசு
 • 1984 - என். சுந்தரராசு - காங்கிரசு
 • 1989 - என். சுந்தரராசு - காங்கிரசு
 • 1991 - என். சுந்தரராசு - காங்கிரசு
 • 1996 - என். சிவா - திமுக
 • 1998 - இராசா பரமசிவம் - அதிமுக
 • 1999 - எசு. திருநாவுக்கரசு - எம்சிஆர் அதிமுக
 • 2004 - எசு. இரகுபதி - திமுக

இரகுபதி இந்திய அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக உள்ளார்.

14வது மக்களவை முடிவுதொகு

இரகுபதி - திமுக = 466,133

இரவிச்சந்திரன் - அதிமுக = 309,637

வெற்றி வித்தியாசம் = 156, 496