திருச்சி சிவா
திருச்சி சிவா [1] (Tiruchi Siva) (பிறப்பு: 6 சூன், 1954) இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினரும், திமுக வின் தலைவர்களுள் ஒருவரான திருச்சி நடேசன் சிவா (அ) திருச்சி என். சிவா[1], தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான இவர் எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார்.
திருச்சி என். சிவா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 15, 1954 திருச்சி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க |
வாழ்க்கை துணைவர்(கள்) | தேவிகா ராணி |
பிள்ளைகள் | காயத்ரி சூர்யா பத்மபிரியா |
இருப்பிடம் | திருச்சி |
கல்வி | முதுகலை ஆங்கிலம், இளங்கலை சட்டம் |
இணையம் | நாடாளுமன்ற உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம் |
ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.
இலங்கைவாழ்த் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாகக் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.[சான்று தேவை] நூல்கள் பலவற்றையும், அவரின் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் பல சமுதாய, விழிப்புணர்வு மற்றும் அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியவர்[1]. அவர் எழுதிய நூல்களில் தலைநகரில் தமிழன் குரல் என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும், மேலும் குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர்[1].
தனிநபர் மசோதாதொகு
45 ஆண்டுகளுக்கு பிறகு இவர் கொண்டு வந்த திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதா 2015 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.[2][3] இதற்கு முன்பு 1970ஆம் ஆண்டு தான் கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் தொடர்பான தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம் பரணிடப்பட்டது 2011-05-29 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பராணிடப்பட்ட நாள் 12-06-2009
- ↑ 45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச்சி சிவா சாதனை. விகடன். 25 ஏப்ரல் 2015. https://www.vikatan.com/government-and-politics/politics/45653-.
- ↑ RS passes Bill on transgender rights. The Hindu. 24 April 2015. https://www.thehindu.com/news/national/rajya-sabha-passes-private-bill-on-transgenders/article7138056.ece.