எஸ். ஜெகத்ரட்சகன்

இந்திய அரசியல்வாதி

எஸ். ஜெகத்ரட்சகன் (S. Jagathrakshakan, பிறப்பு: ஆகத்து 15, 1950) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், வணிகரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சா. ஜெகத்ரட்சகன்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்
பதவியில்
2012-2013
பிரதமர்மன்மோகன் சிங்
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்
பதவியில்
2009 - 2012
பிரதமர்மன்மோகன் சிங்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1999-2004

2009-2014

2019-
தொகுதிஅரக்கோணம்
பதவியில்
1984–1989
தொகுதிசெங்கல்பட்டு
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதிஉத்திரமேரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாமிக்கண்ணு ஜெகத்ரட்சகன்

15 ஆகத்து 1950 (1950-08-15) (அகவை 73)
விழுப்புரம் மாவட்டம்
துணைவர்அனுசுயா
பிள்ளைகள்2
பெற்றோர்ஜி. சாமிக்கண்ணு கவுண்டர், இலட்சுமி அம்மா[1]
வேலைஅரசியல்வாதி

இளமைக் காலம் தொகு

இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாமிக்கண்ணு கவுண்டர் மற்றும் தாய் இலட்சுமி அம்மா ஆகியோர் ஆவர். இவர் வழுதாவூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார். இவருக்கு அனுசுயா என்னும் மனைவியும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 நவம்பர் முதல் 2013 மார்ச்சு வரை மாநிலத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[2] பாலாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அன்னை தெரேசா என்னும் நூல் உட்பட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். 1984 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய மக்களவை உறுப்பினரானார்.[1] இவர் 1985 முதல் 1989 வரை அதிமுகவின் மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார்.[1][3][4] 1999 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற  மக்களவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004 இல் வன்னியர் இனத்தை அடிப்படையாகக் கொண்ட வீர வன்னியர் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். 2004லேயே இக்கட்சி ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் இக்கட்சி 2009இல் திமுகவுடன் இணைந்தது.

போட்டியிட்ட தேர்தல்களும், வகித்த பதவிகளும் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 உத்திரமேரூர் அதிமுக வெற்றி 48.44 எஸ். ராமதாஸ் இந்திய தேசிய காங்கிரசு 46.67[5]
இந்தியப் பொதுத் தேர்தல், 1984 செங்கல்பட்டு அதிமுக வெற்றி 54.09 எம். வி. இராமு திமுக 43.5[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 உத்திரமேரூர் அதிமுக (ஜானகி அணி) தோல்வி 9.89 கே. சுந்தர் திமுக 34.71[7]
இந்தியப் பொதுத் தேர்தல், 1999 அரக்கோணம் திமுக வெற்றி 47.72 கே. வி. தங்கபாலு இந்திய தேசிய காங்கிரசு 34.55[8]
இந்தியப் பொதுத் தேர்தல், 2009 அரக்கோணம் திமுக வெற்றி 48.66 அர. வேலு பாமக 35.79[9]
இந்தியப் பொதுத் தேர்தல், 2014 ஸ்ரீபெரும்புதூர் திமுக தோல்வி 36.4 க. நா. இராமச்சந்திரன் அதிமுக 42.21[10]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019 அரக்கோணம் திமுக வெற்றி ஏ. கே. மூர்த்தி பாமக
 • 1984: சட்டமன்ற உறுப்பினர் (முதல் முறை)
 • 1985-1989: 8வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை)
 • 1999-2004: 13வது மக்களவை உறுப்பினர் (இரண்டாவது முறை)
 • 1999-2000: வெளியுறவு மற்றும் மனித வள மேம்பாட்டு குழுவின் உறுப்பினர்
 • 2000 முதல்: கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்
 • மே 2009: 15வது மக்களவை உறுப்பினர் (மூன்றாவது முறை)
 • சூன் 2009-28 அக்டோபர் 2012:மாநில, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்[11]
 • 2 நவம்பர் 2012 – 20 மார்ச் 2013:மாநில, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்[2]
 • மே 2019: 17வது மக்களவை உறுப்பினர் (நான்காவது முறை)

முறைகேடுகள் தொகு

மார்ச்சு 2012 இல் வெளியான இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய, பிரச்சினைகளில்  எஸ். ஜெகத்ரட்சகனின் பெயர் முக்கிய இடம் பெற்றிருந்தது. இவர் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 2007இல் தன்னுடைய நிறுவனத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் 2009இல் ரூ.5 கோடியும், 2011ல் ரூ.70 கோடியும் சொத்துக்குவிப்பு செய்ததாக நம்பப்படுகிறது. மத்திய அரசின் அமைச்சர்களை ஒப்பிடும்போது இது அதிகப்படியான சொத்துக்குவிப்பு சதவீதமாகும். ஜூன் 2009இல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர் தன்னுடைய ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு ஓர் இடத்திற்கு ரூ. 20 லட்சங்கள் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.[12][13][14]

குறிப்புகள் தொகு

 1. 1.0 1.1 1.2 "Biographical sketch at Indian Parliament website". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 22--11-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. 2.0 2.1 PTI (2 November 2012). "Jagathrakshakan shifted to Commerce and Industry". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/jagathrakshakan-shifted-to-commerce-and-industry/article4058567.ece. பார்த்த நாள்: 22 November 2013. 
 3. "Vellore voters prove predictions wrong". The Hindu (Chennai, India). 18 May 2009 இம் மூலத்தில் இருந்து 21 மே 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090521120126/http://www.hindu.com/2009/05/18/stories/2009051852700300.htm. பார்த்த நாள்: 22 November 2013. 
 4. Mohan, Gopu (8 September 2012). "The businessman-politician who finds himself in coal row". Chennai. http://www.indianexpress.com/news/the-businessmanpolitician-who-finds-himself-in-coal-row/999659/. பார்த்த நாள்: 22-11-2013. 
 5. Statistical report on Tamil Nadu Assembly general elections 1980, p. 38
 6. Statistical report on Indian general elections 1984, p. 38
 7. Statistical report on Tamil Nadu Assembly general elections 1989, p. 260
 8. Statistical report on Indian general elections 1999, p. 224
 9. Statistical report on Indian general elections 2009, p. 344
 10. "Statistical report on General elections, 2014 to the 16th Lok Sabha". Election Commission of India. 2014. Archived from the original on 1 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 11. "Profile of Member of Parliament". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
 12. "Coalgate: Now, DMK leader in the dock". Zee News. 7 September 2012. http://zeenews.india.com/news/nation/coalgate-now-dmk-leader-in-the-dock_798230.html. பார்த்த நாள்: 7 September 2012. 
 13. "Coal scam: DMK minister comes under fire". Hindustan Times. 7 September 2012 இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120907005950/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Coal-scam-DMK-minister-comes-under-fire/Article1-925819.aspx. பார்த்த நாள்: 7 September 2012. 
 14. "UPA minister's kin linked to coal block allocation deal". Times of India. 7 September 2012 இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120909001517/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-07/india/33676184_1_coal-block-core-sector-allocation. பார்த்த நாள்: 7 September 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெகத்ரட்சகன்&oldid=3943248" இலிருந்து மீள்விக்கப்பட்டது