செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரசு தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கு வென்றவர்கள்
தொகு- 1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
- 1957 - ந. சிவராஜ் - சுயேச்சை.
- 1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
- 1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
- 1967 - சி.சிட்டிபாபு - திமுக.
- 1971 - சி.சிட்டிபாபு - திமுக.
- 1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
- 1980 - அன்பரசு - காங்கிரசு.
- 1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
- 1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
- 1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
- 1996 - கே.பரசுராமன் - திமுக.
- 1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
- 1999 - அ.கி. மூர்த்தி - பாமக.
- 2004 - அ.கி. மூர்த்தி - பாமக.
2004 தேர்தல் முடிவு
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாமக | ஏ.கே.மூர்த்தி | 431,643 | 56.85 | +9.62 | |
அஇஅதிமுக | K.N.ராமச்சந்திரன் | 282,919 | 37.26 | -8.13 | |
ஜனதா கட்சி | குமரேசன் | 10,956 | 1.44 | n/a | |
பசக | நாகமணி | 8,659 | 1.14 | n/a | |
வாக்கு வித்தியாசம் | 148,724 | 19.59 | +17.76 | ||
பதிவான வாக்குகள் | 759,246 | 65.02 | +6.69 | ||
பாமக கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.