அர. வேலு

ரங்கசாமி வேலு (பிறப்பு: சூலை 26, 1940) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர்.

ரங்கசாமி வேலு
முன்னாள் இரயில்வே அமைச்சர்
பதவியில்
2004-2009
பின்வந்தவர் கே. எச். முனியப்பா
தொகுதி அரக்கோணம்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 சூலை 1940 (1940-07-26) (அகவை 81)
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சி பாமக
வாழ்க்கை துணைவர்(கள்) மல்லிகா
பிள்ளைகள் 2
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு

இந்திய ஆட்சிப்பணி  அதிகாரியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தார்; தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் மாவட்ட ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாக கூட்டு ஆணையராகவும், வருவாய் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்தார்.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர._வேலு&oldid=3166087" இருந்து மீள்விக்கப்பட்டது