டி. ஆர். பி. ராஜா

இந்திய அரசியல்வாதி

தளிகோட்டை இராசுத்தேவர் பாலு ராஜா (T.R.B. Rajaa ) எனும் த. இரா. பா. ராஜா என அழைக்கப்படும் இவா் தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் ஆவார். இவர் 2011 முதல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மன்னாா்குடி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.

த. ரா. பா. ராஜா
2022-ல்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 மே 2011
முதன்மை அமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்வி. சிவபுண்ணியம்
தொகுதிமன்னார்குடி
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2023
குடியரசுத் தலைவர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்தங்கம் தென்னரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூலை 1976 (1976-07-12) (அகவை 47)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சர்மிளா ராஜா (திருமணம். 2005)
உறவுகள்லியோ முத்து (மாமானார்)
பிள்ளைகள்2
பெற்றோர்டி ஆர் பாலு (தந்தை) ரேணுகா தேவி (அம்மா)
முன்னாள் கல்லூரி

கல்வி தொகு

இராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்தார்.

வகித்த/வகிக்கும் பதவிகள் தொகு

  • மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர். 2011-முதல்
  • தமிழ்நாடு தொழில், முதலீடு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்: 2023-முதல்
  • தமிழக சட்டமன்ற பேரவையின் மாற்றுத் தலைவர்: 2021–2023
  • தமிழ்நாடு மாநில திட்டமிடுதல் குழு உறுப்பிநர்: 2021–2023
  • தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுத் தலைவர்: 2021–2023
  • தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர்: 2012–13; 2019–21; 2021-2023
  • தமிழ்ப் பல்கலைகழகப் பேரவை உறுப்பினர்: 2019-2021
  • தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்: 2012-13; 2015–16
  • தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர்: 2011-12; 2014–15; 2021-2023 (தலைவராக)
  • சென்னைப் பல்கலைகழகப் பேரவை உறுப்பினர்: 2011-13

போட்டியிட்டத் தேர்தல்கள் தொகு

ஆண்டு தொகுதி முடிவு
2011 மன்னார்குடி வெற்றி
2016 மன்னார்குடி வெற்றி
2021 மன்னார்குடி வெற்றி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._பி._ராஜா&oldid=3943699" இலிருந்து மீள்விக்கப்பட்டது