தங்கம் தென்னரசு

இந்திய அரசியல்வாதி

தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் தொழிற்துறை துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகனும் மற்றும் பெண் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் அண்ணனும் ஆவார்.

தங்கம் தென்னரசு
Thangam Thennarasu
தங்கம் தென்னரசு
முன்னவர் எவருமில்லை
தமிழக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
முன்னவர் மு. சி. சம்பத்
பள்ளிக் கல்வி அமைச்சர்
பதவியில்
மே 2006 – மே 2011
முதலமைச்சர் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2011
முன்னவர் எவருமில்லை
தொகுதி திருச்சுழி
பதவியில்
2006–2011
முன்னவர் கே. கே. சிவசாமி
பின்வந்தவர் வைகைச் செல்வன்
தொகுதி அருப்புக்கோட்டை
பதவியில்
சனவரி 1998 – சூன் 2001
முன்னவர் தங்கபாண்டியன்
பின்வந்தவர் கே. கே. சிவசாமி
தொகுதி அருப்புக்கோட்டை
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சூன் 1966 (1966-06-03) (அகவை 56)
மல்லாங்கிணறு, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) மணிமேகலை
பிள்ளைகள் 2 (மகள்)
பெற்றோர் தங்கபாண்டியன்
ராஜாமணி
இணையம் தங்கம் தென்னரசு

தென்னரசு மல்லாங்கிணறு கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்வுதொகு

இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக தொழிற்துறை (தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்) அமைச்சராக பதவியேற்றார்.[1]

தேர்தல் வரலாறுதொகு

தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு வாக்கு வீதம் எதிர்ப் போட்டியாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்குவீதம்
1997–98 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் அருப்புக்கோட்டை திமுக வெற்றி 36.50% வி. எஸ். பஞ்சவர்ணம் அதிமுக 34.73%[2]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 அருப்புக்கோட்டை திமுக தோல்வி 40.32% கே. கே. சிவசாமி அதிமுக 46.07%[3]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 அருப்புக்கோட்டை திமுக வெற்றி 44.88% கே. முருகன் அதிமுக 37.77%[4]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 திருச்சுழி திமுக வெற்றி 54.36% எசக்கிமுத்து அதிமுக 41.07%[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 திருச்சுழி திமுக வெற்றி 53.61% கே. தினேஷ்பாபு அதிமுக 37.77%[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 திருச்சுழி திமுக வெற்றி 59.15% எஸ். ராஜசேகர் அதிமுக 23.86%

மேற்கோள்கள்தொகு

  1. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  2. "1997–98 Tamil Nadu Legislative Assembly by-election".
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2001 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2006 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2011 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  6. "Tamil Nadu General Legislative Election 2016, Election Commission of India".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_தென்னரசு&oldid=3369741" இருந்து மீள்விக்கப்பட்டது