வே. தங்கபாண்டியன்

(தங்கபாண்டியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வே. தங்கபாண்டியன் (V. Thangapandian; 13 செப்டம்பர் 1933[1] - 31 சூலை 1997) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், அக் கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் (1974-97), சட்ட மேலவை உறுப்பினர் (1968-74), அருப்புக்கோட்டை தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் (1989-91; 1996-97),[2][3] தமிழ்நாட்டுக் கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் (1996-97), வணிகவரித்துறை அமைச்சர் (சனவரி - சூலை 1997) ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாண்புமிகு
V. Thangapandian
வே. தங்கபாண்டியன்
வணிகவரித்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
22 சனவரி 1997 – 31 சூலை 1997
முதலமைச்சர்மு. கருணாநிதி
முன்னையவர்மு. கருணாநிதி
பின்னவர்மு. கருணாநிதி
கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
13 மே 1996 – 22 சனவரி 1997
முதலமைச்சர்மு. கருணாநிதி
முன்னையவர்சி. பி. பட்டாபிராமன் (கூட்டுறவு)
பின்னவர்கே. என். நேரு
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
13 மே 1996 – 31 சூலை 1997
முன்னையவர்வி.ஜி. மணிமேகலை
பின்னவர்தங்கம் தென்னரசு
(இடைத்தேர்தல்; 1998-2001)
தொகுதிஅருப்புக்கோட்டை
பதவியில்
27 சனவரி 1989 – 30 சனவரி 1991
முன்னையவர்எம். பிச்சை (1984-86)
பஞ்சவர்ணம் (1986-89)
பின்னவர்வி.ஜி. மணிமேகலை
தொகுதிஅருப்புக்கோட்டை
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
1 மார்ச் 1968 – 29 பிப்ரவரி 1974
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1933
சாயல்குடி,
இராமநாதபுரம் மாவட்டம்,
மதராசு தலைமாகாணம்
, பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு31 சூலை 1997(1997-07-31) (அகவை 63)
இராசபாளையம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
துணைவர்
  • இராசாமணி (தி. 1962)
பிள்ளைகள்தமிழச்சி தங்கப்பாண்டியன் (மகள்)
தங்கம் தென்னரசு (மகன்)
பெற்றோர்(s)வேலு நாச்சியார் (தாய்)
வேலுச்சாமி (தந்தை)
முன்னாள் கல்லூரிதியாகராசர் கல்லூரி, மதுரை
புனைப்பெயர்(s)'தங்கா' பாண்டியன்
மல்லாங்கிணறு சார்

இவர் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக சார்பில் தென்சென்னை தொகுதிக்கான இந்திய மக்களவை உறுப்பினராக (2019-) உள்ளார். மகன் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக (2023-) உள்ளார்.

தொடக்க வாழ்க்கை தொகு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி எனும் ஊரில் வேலு நாச்சியார் - வேலுச்சாமி இணையருக்கு இரண்டாம் மகனாக 13 செப்டம்பர் 1933 அன்று பிறந்தார் தங்கபாண்டியன். தொடக்கக் கல்வியை சாயல்குடியிலேயே பயின்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று இளங்கலை (B.A.), தொழில்நுட்பவியல் இளையர் (B.T.) ஆகிய பட்டங்களைப் பெற்றார்.[4] அக் காலத்தில் திராவிட மாணவர் மன்றம், இளங்கோ மன்றம் ஆகிய அமைப்புகளில் செயல்பட்டார். "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரையை அழைத்துக் கல்லூரியில் கூட்டங்களை நடத்தினார்.[5]

அரசியல் தொகு

17 செப்டம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கப்பட்டபோது அதன் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். கல்லூரிப் படிப்புக்குப்பின் மல்லாங்கிணறு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியவாறே கட்சிப் பணிகளையும் தொடர்ந்தார். பிறகு ஆசிரியர் பணியைக் கைவிட்டு முழுநேரமாகக் கட்சிப்பணிகளை மேற்கொண்டார்.

சட்ட மேலவை உறுப்பினர் (1968-74) தொகு

திமுக, சென்னை மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைத்தபின் அன்றைய இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் எஸ். எஸ். தென்னரசு பரிந்துரையின்பேரில் தங்கபாண்டியனை 1 மார்ச் 1968 தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக்க வழிசெய்தார் அண்ணாதுரை. இப் பதவியில் 28 பிப்ரவரி 1974 வரை இருந்தார் தங்கபாண்டியன்.[6] தன் பதவிக்காலத்தில் மாநிலத் தன்னாட்சித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய மேலவைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.[7]

மாவட்டச் செயலாளர் (1974-97) தொகு

எஸ். எஸ். தென்னரசு-வுக்குப் பின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார் தங்கபாண்டியன். நெருக்கடி நிலை காலகட்டத்தில் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மையச் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.[7][8]

காரியாப்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.[8] 1997-இல் தான் மறையும்வரை மாவட்டச் செயலாளராக இருந்தார்.[5]

சட்டப் பேரவை உறுப்பினர் - முதல் பதவிக்காலம் (1989-91) தொகு

1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தங்கபாண்டியன், அ.இ.அ.தி.மு.க-வின் வேட்பாளர் வி. எஸ். எம். பஞ்சவர்ணத்தைக் காட்டிலும் 15,523 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சட்டமன்றத்துக்குத் தேர்வானார்.

1989 Tamil Nadu Legislative Assembly election : Aruppukottai
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
DMK V. Thangapandian 44,990 45.59%
அஇஅதிமுக Panchavarnam. V. S. M 29,467 29.86%
காங்கிரசு Chelliah. R. M 18,466 18.71%
[[All India Forward Bloc|வார்ப்புரு:All India Forward Bloc/meta/shortname]] Perumal. A. R. M 3,521 3.57%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Dhanushokodi. L. M 419 0.42%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Ramaraj. K. R. M 286 0.29%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Raju. C. M 246 0.25%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Alaguraj. A. M 212 0.21%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Sami. E. V. M 176 0.18%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Velchami. R. S. M 123 0.12%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Palani. K. M 103 0.10%
வெற்றி விளிம்பு 15,523 15.73% 11.82%
பதிவான வாக்குகள் 98,688 70.76% -3.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,982
[[Dravida Munnetra Kazhagam|வார்ப்புரு:Dravida Munnetra Kazhagam/meta/shortname]] gain from அஇஅதிமுக Swing 0.27%

சட்டப் பேரவை உறுப்பினர் - இரண்டாம் பதவிக்காலமும் அமைச்சர் பதவியும் (1996-97) தொகு

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தங்கபாண்டியன், அ.இ.அ.தி.மு.க-வின் வேட்பாளர் கே. சுந்தரபாண்டியனைக் காட்டிலும் 16,365 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சட்டமன்றத்துக்குத் தேர்வானார்.

1996 Tamil Nadu Legislative Assembly election : Aruppukottai
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
DMK V. Thangapandian 45,081 43.70%
அஇஅதிமுக Sundarapandian. K. 28,716 27.84%
[[Marumalarchi Dravida Munnetra Kazhagam|வார்ப்புரு:Marumalarchi Dravida Munnetra Kazhagam/meta/shortname]] Shanmugasundaram. R. M. 16,987 16.47%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Chinnakaruppan. K. 9,565 9.27%
style="background-color: வார்ப்புரு:All India Indira Congress (Tiwari)/meta/color; width: 5px;" | [[All India Indira Congress (Tiwari)|வார்ப்புரு:All India Indira Congress (Tiwari)/meta/shortname]] Perumal. V. 1,077 1.04%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Sivasamy. S. 260 0.25%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Kanthirajan. K. S. 201 0.19%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Periasamy Pannai. S. 148 0.14%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Athimoolam. V. 146 0.14%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Veeran. A. K. 132 0.13%
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Sundarasu. T 116 0.11%
வெற்றி விளிம்பு 16,365 15.86% -4.73%
பதிவான வாக்குகள் 103,165 68.31% 4.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,117
[[Dravida Munnetra Kazhagam|வார்ப்புரு:Dravida Munnetra Kazhagam/meta/shortname]] gain from அஇஅதிமுக Swing -15.21%

தங்கபாண்டியனை கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக அன்றைய முதலமைச்சரான "கலைஞர்" மு. கருணாநிதி நியமித்தார். 22 சனவரி 1997 அன்று அவர் துறை, கே. என். நேருவுக்கு ஒதுக்கப்பட்டது. கருணாநிதி வகித்த வணிகவரித்துறை அமைச்சர் பொறுப்பை தங்கபாண்டியன் ஏற்றார்.[9]

மறைவு தொகு

1997-இல் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் ஏற்பட்ட கலவரத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் கருணாநிதியால் அனுப்பப்பட்ட தங்கபாண்டியன் அந் நகரிலேயே 31 சூலை அன்று தன் 64-ஆம் அகவையில் காலமானார்.[5] அவர் உடல், மல்லாங்கிணறில் அடக்கம் செய்யப்பட்டது.

வழிமரபினர் தொகு

1962-இல் இராசாமணி என்பவரை சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தார் தங்கபாண்டியன். இவர்களுக்கு 1962-இல் சுமதி என்ற மகள் பிறந்தார். 1966-இல் பிறந்த மகனுக்கு எஸ். எஸ். தென்னரசு நினைவாக தங்கம் தென்னரசு எனப் பெயரிட்டனர். இராசாமணி அம்மையார், 4 அக்டோபர் 2020 அன்று இரவு 8 மணிக்கு தன் 84-ஆம் அகவையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல், அதற்கு மறுநாள் மாலையில் தங்கபாண்டியனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.[10][11]

சுமதி, பின்னாளில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆனார். சென்னை இராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாகப் பணியாற்றியவர். இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஆர்வலராகக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் ஆகிய களங்களில் பங்களித்துள்ளார். திமுக மகளிரணியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். மே 2019 முதல் இந்திய மக்களவையில் தென்சென்னை தொகுதிக்கான உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் இணையர் சந்திரசேகர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தங்கம் தென்னரசு, இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றபின் தெற்கு பெட்ரோல் வேதிப்பொருள் தொழில் துறை நிறுவனத்தில் (SPIC) பொறியாளராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். தன் தந்தையின் மறைவுக்குப்பின் அருப்புக்கோட்டை தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினராக (1998-2001) பணியாற்றினார். 2006-இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்வான அவர், கருணாநிதியின் அமைச்சில் 2011 வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2011 முதல் திருச்சுழி தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் தொழிற்துறை, ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத்துறை, மற்றும் தொல்லியல் அமைச்சராகவும் (2021-23), மே 2023 முதல் தமிழ்நாட்டு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் செயலாற்றியுள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற இணையரும் இரு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "https://twitter.com/ThamizhachiTh/status/1437459911621820420?s=20". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22. {{cite web}}: External link in |title= (help)
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. "https://twitter.com/Rksenthil10/status/1684047121190903808?s=20". X (formerly Twitter). பார்க்கப்பட்ட நாள் 2023-09-13. {{cite web}}: External link in |title= (help)
  5. 5.0 5.1 5.2 "https://twitter.com/slbala/status/1692731455401873639/photo/1". X (formerly Twitter). பார்க்கப்பட்ட நாள் 2023-08-29. {{cite web}}: External link in |title= (help)
  6. "TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY: QUADRENNIAL REVIEW 1967-70" (PDF). TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (https://assembly.tn.gov.in/). p. 123. {{cite web}}: External link in |website= (help)
  7. 7.0 7.1 "https://twitter.com/MPaasarai/status/1692770870156996818?s=20". X (formerly Twitter). பார்க்கப்பட்ட நாள் 2023-09-12. {{cite web}}: External link in |title= (help)
  8. 8.0 8.1 "https://twitter.com/aashik_offl/status/1421484165048901637?s=20". X (formerly Twitter). பார்க்கப்பட்ட நாள் 2023-09-13. {{cite web}}: External link in |title= (help)
  9. "TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (ELEVENTH ASSEMBLY) REVIEW 1996-2001" (PDF). TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (https://assembly.tn.gov.in/). p. 26. {{cite web}}: External link in |website= (help); line feed character in |title= at position 59 (help)
  10. அதிதேஜா. "ராஜாமணி தங்கபாண்டியன் மறைவு! -நாளை மாலை மல்லாங்கிணறு கிராமத்தில் நல்லடக்கம்!". நக்கீரன்.
  11. SPECIAL CORRESPONDENT. "MLA's mother laid to rest". தி இந்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._தங்கபாண்டியன்&oldid=3905046" இலிருந்து மீள்விக்கப்பட்டது