வைகைச் செல்வன்
வைகைச் செல்வன் என்பவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், “இணைய இதழ்கள் - ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அ.இ.அ.தி.மு.கவில் இளைஞர் - இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக 2013 செப்டம்பர் 5 ஆம் நாள் வரை பதவி வகித்தார். இதற்கு முன்பாக 17 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க.வின் இலக்கிய அணிச்செயலாளராக இருந்து வந்தார்.
அமைச்சர்
தொகு2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2012, அக்டோபர் 6 முதல் 2013, பிப்ரவரி 27 வரை தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக செயல்பட்டு வந்தார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.[1],[2] 2013 செப்டம்பர் 5 ஆம் நாள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[3]
குடும்பம்
தொகுஇவருக்கு முத்துச்செல்வி என்கிற மனைவியும், நற்றிணை, நற்றமிழ் என்கிற ஜெயஸ்ரீ எனும் இரு மகள்களும் இருக்கின்றனர்.
பதிப்பகம்
தொகுஇவர் நற்றிணை பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- வடக்கை வெல்லும் தெற்கு
- வைகைச்செல்வன் கவிதைகள்
- சில்லுக்கருப்பட்டி (சிறுகதைகள்)
- திருக்குறள் நவீன உரை
- உயர்திரு
- அனுமதி இலவசம்
- கனவோடு வெகுதூரம் (நாவல்)
விருதுகள்
தொகு- திருவள்ளுவர் விருது - 2021[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச்சு 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்". தினகரன். Archived from the original on 2013-02-28. பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச்சு 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ அமைச்சர் வைகைச்செல்வன் பதவியில் இருந்து நீக்கம் 05 September 2013 04:55 PM IST தினமணி பார்த்த நாள் 5.9.2013
- ↑ "திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.