ஆர். காந்தி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

ஆர். காந்தி (R. Gandhi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 1996 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து, 2006 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 2016 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் (கைத்தறி மற்றும் துணி நூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்) அமைச்சசராக பதவியேற்றார்.[4] இவர் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.[5]

ஆர். காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
தொகுதி இராணிப்பேட்டை
தனிநபர் தகவல்
பிறப்பு இராணிப்பேட்டை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) கமலா
பிள்ளைகள் வினோத்
சந்தோஷ்
பெற்றோர் சின்னப்பா

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1996 இராணிப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 50.80%
2006 இராணிப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 55%
2016 இராணிப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 43.33%
2021 இராணிப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 49.79%

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு