தா. மோ. அன்பரசன்
தா. மோ. அன்பரசன் (T. M. Anbarasan) என்பவர் தமிழகத்தின் தற்போதைய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சரும் ஆவார். தமிழக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 2006-2011 வரை பதவி வகித்தார்.
தா. மோ. அன்பரசன் | |
---|---|
ஊரக தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
முதல்வர் | மு. க. ஸ்டாலின் |
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் மே – 14 மே 2011 | |
முதல்வர் | மு. கருணாநிதி |
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் 12 மே 2006 – 14 மே 2011 | |
தொகுதி | ஆலந்தூர் |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 21, 1960[1] குன்றத்தூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | தமிழ்ச்செல்வி |
பிள்ளைகள் | தமிழ்மாறன் லாவண்யா |
வாழிடம்(s) | எண். 26, துலுக்க தெரு, குன்றத்தூர், சென்னை - 600 069. |
வேலை | அரசியல்வாதி |
இவர் குன்றத்தூரில் நெசவாளர் குடும்பத்தில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பல்கலைக்கழக முந்தைய படிப்பு வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதியை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[3] தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக ஊரக தொழிற்துறை (ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.[5] இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "T. M. Anbarasan profile at TN government website". Archived from the original on 2008-07-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
- ↑ "Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur". Archived from the original on 2006-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ "களம் காணும் வேட்பாளர்கள்". தினமணி. https://www.dinamani.com/all-sections/arasiyal-arangam/2011/Mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html. பார்த்த நாள்: 18 June 2024.