துரை வையாபுரி

துரை வைகோ அல்லது கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராவார்[4][5][6] இவர் மதிமுக பொதுச்செயலாளார் வை. கோபால்சாமியின் மகனாவார்.

துரை வையாபுரி
பிறப்பு1972
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
  • வைகோ (தந்தை)
  • ரேணுகாதேவி (தாய்)
வாழ்க்கைத்
துணை
கீதா[1]
பிள்ளைகள்
  • வருண்
  • வானதிரேணு
[2][3]

இளமைக் காலம் தொகு

இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்[7]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார்.[8] மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர்.[9][10] 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும்[11] தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும்[12] தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.[13] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார்.[14] 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.[15]

தொழில் தொகு

இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார்.[16] இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.[17][18] மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.[19]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5187&ncat=18&Print=1
  2. தினமலர், 19 சூன் 2015, பக்கம் 4
  3. http://tamil.oneindia.com/news/india/vaiko-s-grandsons-is-now-tennis-champion-187728.html
  4. http://timesofindia.indiatimes.com/home/sunday-times/Shooting-from-the-lip/articleshow/17266904.cms
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
  7. "தந்தையர் தினம்: "தோல்வினு தெரிஞ்சா பிரியாணி சமைச்சு விருந்து கொடுப்பார் அப்பா!" - துரை வைகோ பேட்டி". விகடன். https://www.vikatan.com/news/politics/politician-durai-vaiko-interview. பார்த்த நாள்: 26 November 2022. 
  8. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-son-political-limelight-door-door-canvass-lse-198728.html
  9. "List of Star Campaingers" (PDF). Elections.tn.gov. Election commission of India. Archived from the original (PDF) on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "l6th LokSabha- Election Campaign" (PDF). Election commission of India. MDMK.
  11. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-wave-viruthunagar-constituency-says-vaiko-son-durai-vaiyapuri-lse-198614.html
  12. வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு
  13. "வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு; பதவியில் இல்லாத போதும் மக்களுக்காகவே உழைப்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015.
  14. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-son-campaign-at-kovilpatti-252837.html
  15. "கட்சிப் பொறுப்பேற்ற துரை வைகோ: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து". நியூஸ்7. பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
  16. My Son is a Distributor for Tobacco Products - Smoking Is Not Harm As Alcohol - Vaiko Getting Angry
  17. ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்
  18. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Skeletons-in-Prohibition-Megaphones-closet/2015/08/04/article2956613.ece
  19. https://www.zaubacorp.com/director/GOPALSAMY-DURAI-VAIYAPURI/01723028
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_வையாபுரி&oldid=3915853" இலிருந்து மீள்விக்கப்பட்டது