திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும்.

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,86,766
சட்டமன்றத் தொகுதிகள்139. திருவரங்கம்
140. திருச்சிராப்பள்ளி மேற்கு
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு
142. திருவெறும்பூர்
178. கந்தர்வக்கோட்டை
180. புதுக்கோட்டை

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்: முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சிராப்பள்ளி I, II ஆகியவை திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருவரங்கம்
  2. திருச்சிராப்பள்ளி மேற்கு
  3. திருச்சிராப்பள்ளி கிழக்கு
  4. திருவெறும்பூர்
  5. கந்தர்வக்கோட்டை
  6. புதுக்கோட்டை

இங்கு வென்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 மரு. எட்வர்ட் பவுல் மதுரம் சுயேட்சை
1957 எம். கே. எம். அப்துல் சலாம் இந்திய தேசிய காங்கிரசு
1962 கே. ஆனந்த நம்பியார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1967 கே. ஆனந்த நம்பியார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 என். செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
1984 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1989 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1991 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1996 அடைக்கலராசு தமிழ் மாநில காங்கிரசு
1998 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி
1999 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி
இடைத்தேர்தல், 2001 தலித் எழில்மலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004 எல். கணேசன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 சு. திருநாவுக்கரசர்[1] இந்திய தேசிய காங்கிரசு
2024 துரை வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

எல். கணேசன் (மதிமுக) – 4,50,907.

பரஞ்சோதி (அதிமுக) – 2,34,182

வாக்குகள் வித்தியாசம் - 2,16,725

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் ப. குமார், காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை, 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ப. குமார் அதிமுக 2,98,710
சாருபாலா தொண்டைமான் காங்கிரசு 2,94,375
ஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 61,742
லலிதா குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி 30,329
என். கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 4,897

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ப. குமார் அதிமுக 4,58,478
அன்பழகன் திமுக 3,08,002
ஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 94,785
சாருபாலா தொண்டைமான் காங்கிரசு 51,537

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
67.35% 71.11% 3.76%

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளரான, இளங்கோவனை 459,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
சு. திருநாவுக்கரசர்   காங்கிரசு 5,618 6,21,285 59.28%
மருத்துவர் வி.இளங்கோவன்   தேமுதிக 620 1,61,999 15.46%
சாருபாலா தொண்டைமான்   அமமுக 419 1,00,818 9.62%
வினோத். வி   நாம் தமிழர் கட்சி 307 65,286 6.23%
ஆனந்த்ராஜா. வி   மக்கள் நீதி மய்யம் 164 42,134 4.02%
நோட்டா - - 141 14,437 1.38%

18வது மக்களவைத் தேர்தல்(2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : திருச்சிராப்பள்ளி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக துரை வைகோ 5,42,213 51.35 51.35
அஇஅதிமுக ப. கருப்பையா 2,29,119 21.70 21.70
நாதக து. ராஜேஷ் 1,07,458 10.18 3.91
அமமுக ப. செந்தில்நாதன் 1,00,747 9.54 ---
நோட்டா நோட்டா 13,849 1.31 -0.08
வெற்றி விளிம்பு 3,13,094 29.65 -14.48
பதிவான வாக்குகள் 10,55,964 67.95 -1.55
பதிவு செய்த வாக்காளர்கள் 15,53,985 2.98
மதிமுக gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு