முசிறி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முசிறி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 145.[1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

தொகு

இத்தொகுதியில் பின் வரும் பகுதிகள் அடங்கியுள்ளன:

  • தொட்டியம் வட்டம்
  • முசிறி வட்டம் (பகுதி)

பிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஜம்புமடை, வாளசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பைத்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலரை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள்.

மோருபட்டி(பேரூராட்சி), தாத்தையங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).

தொகுதி வரலாறு

தொகு

இந்திய நாடு சுதந்திரம் பெற்று மக்களாட்சிக்காக நடத்தப்படும் தேர்தலில் 1952-இலிருந்து 1967 வரை இப்பகுதி சென்னை மாநிலமாக இருந்தது. தமிழ்நாடு எல்லைகள் சீர்திருத்தம் நடைபெற்ற பிறகு 1971 முதல் தமிழ்நாட்டு பகுதியாக உள்ளது. 2008ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறுசீரமைப்பு உத்தரவுப்படி தொட்டியம் (சட்டமன்றத் தொகுதி) ன் பகுதிகள் முசிறி சட்டமன்றத்தோடு இணைந்தன.

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 தங்கவேலு சுயேச்சை 18427 42.23 எம். பி. கிருசுணசாமி காங்கிரசு 16316 37.40
1957 வி. எ. முத்தையா காங்கிரசு 34427 21.73 டி. வி. சன்னாசி காங்கிரசு 32844 20.73
1962 செ. இராமலிங்கம் காங்கிரசு 32155 50.79 எ. துரைராசு திமுக 27661 43.69
1967 பு. செ. முத்துச்செல்வன் திமுக 32615 51.48 கே. வி. கே. ரெட்டியார் காங்கிரசு 27750 43.80
1971 பு. செ. முத்துச்செல்வன் திமுக 35091 54.29 எ. ஆர். முருகையா ஸ்தாபன காங்கிரசு 24232 37.49
1977 பி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன் அதிமுக 34569 39.27 வி. எசு. பெரியசாமி திமுக 20567 23.36
1980 எம். கே. ராசமாணிக்கம் அதிமுக 53697 52.20 ஆர். நடராசன் திமுக 49171 47.80
1984 செ. இரத்தினவேலு அதிமுக 65759 59.75 ஆர். நடராசன் திமுக 42086 38.24
1989 எம். தங்கவேல் அதிமுக (ஜெ) 49275 39.05 என். செல்வராசு திமுக 47826 37.90
1991 எம். தங்கவேல் அதிமுக 70812 62.83 ஆர். நடராசன் திமுக 39568 35.11
1996 எம். என். ஜோதி கண்ணன் திமுக 67319 51.04 மல்லிகா சின்னசாமி அதிமுக 39551 29.99
2001 சி. மல்லிகா அதிமுக 47946 34.83 எசு. விவேகானந்தன் திமுக 45952 33.38
2006 என். செல்வராசு திமுக 74311 --- டி. பி. பூநாச்சி அதிமுக 63384 ---
2011 என். ஆர். சிவபதி அதிமுக 82631 55 ராஜசேகரன்.என் காங்கிரஸ் 38840 26
2016 எம். செல்வராசு அதிமுக 89,398 52.31% விஜயபாபு காங்கிரஸ் 57,311 33.53%
2021 ந. தியாகராஜன் திமுக 90,624 எம். செல்வராசு அதிமுக 63,788
  • 1952ல் சோசலிசுடு கட்சியின் எம். எசு. நாராயணசாமி 6285 (14.41%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் எசு. சுப்பையா 18925 (21.50%) & ஜனதாவின் பி. அய்யாக்கண்ணு 13965 (15.86%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் ஆர். இராமராசு 18327 (14.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் என். செல்வராசு 20848 (15.81%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை எம். தங்கவேல் 30419 (22.10%) & மதிமுகவின் ஆர். நடராசன் 13338 (9.69%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் எம். இராசலிங்கம் 10538 வாக்குகள் பெற்றார்.
  • 2011ல் சுயேச்சை கண்ணையன் 19193 (13%) வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,70,909 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,485 1.45%[3]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tn.gov.in/ta/government/mlas?page=3 சட்டமன்ற உறுப்பினர்களின் விவரக் குறிப்புகள் - பக்கம் மூன்று
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள்

தொகு