செ. இராமலிங்கம்

செ. இராமலிங்கம் (ஆங்கிலம்:S. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

செ. இராமலிங்கம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஆர். கே. பாரதி மோகன்
தொகுதி மத்திய சென்னை
தமிழ்நாடு ஊராட்சிஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்
தொகுதி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு சீனிவாசநல்லூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) யசோதா
பிள்ளைகள் 2 மகன், 1 மகள்
இருப்பிடம் திருவிடைமருதூர்,தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
பணி விவசாயம், அரசியல்வாதி
As of 22, 2010

அரசியல் வாழ்க்கைதொகு

இவர் 1987, 1980, 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] இவர் இத்தொகுதியில், ஏழுமுறை போட்டியிட்டு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

வகித்த பதவிகள்தொகு

  • தமிழக அரசு மாநில நான்காவது நிதிக்குழு உறுப்பினர்.[7]
  • தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்.
  • திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்.
  • திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலின் அறங்காவலர்குழு தலைவர்.
  • திருவிடைமருதூர் தொகுதியில், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.

வகிக்கும் பதவிகள்தொகு

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._இராமலிங்கம்&oldid=3036803" இருந்து மீள்விக்கப்பட்டது