ப. ரங்கராஜன் குமாரமங்கலம்

இந்திய அரசியல்வாதி

பனின்ரநாத் இரங்கராஜன் குமாரமங்கலம் (மே 12 1952 - ஆகத்து 23, 2000) இரங்கராஜன் குமாரமங்கலம் என்று அறியப்படும் அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசிலும் பின் பாரதீய ஜனதா கட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். காங்கிரசு சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராகவும், பாஜக சார்பில் 1998-2000 வரை திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 1991- திசம்பர் 1993 வரை நரசிம்ம ராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராகவும் வாச்பாய் அரசில் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

மோகன் குமாரமங்கலம் கல்யாணி முகர்சி தம்பதிகளுக்கு மகனாக மே 1952 பிறந்த இவரின் தந்தை வழி தாத்தா ப. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். இவரின் பெரியப்பா ப. பி. குமாரமங்கலம் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்தவர்.இவருக்கு ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் என்கிற மகன் உள்ளார்.

மேற்கோள்கள்தொகு