ப. குமார் (பிறப்பு: 21 ஏப்ரல் 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

ப. குமார்
பதவியில்
2009–2014
தொகுதிதிருச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஏப்ரல் 1971 (1971-04-21) (அகவை 53)
புனல்குளம், புதுக்கோட்டை மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)199, கிரெசன்ட் நகர், முதலாம் வீதி, காஜாமலை, திருச்சி - 620023

வாழ்க்கை வரலாறு

தொகு

தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டைத் தாலுக்காவில் உள்ள புனல்குளம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிவேல் மற்றும் தாயார் முனியம்மாள் ஆகியோருக்கு மகனாக 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் குமார் பிறந்தார்.. சட்டத்துறையில் பணியாற்றிய இவர் திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு தான் போட்டியிட்ட அதே திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

அதிமுகவின் உறுப்பினரான ப. குமார் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானை 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,98,710 ஆகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலிலும் ப. குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த மு. அன்பழகனை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

போட்டியிட்ட தேர்தல்கள்

தொகு
வருடம் தொகுதி முடிவு எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்க்கட்சி
2009 திருச்சிராப்பள்ளி வெற்றி சாருபாலா தொண்டைமான் இந்திய தேசிய காங்கிரஸ்
2014 திருச்சிராப்பள்ளி வெற்றி மு. அன்பழகன் திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. P Kumar re-nominated for Trichy Lok Sabha seat. The Times of India. Retrieved 3 July 2014.
  2. திருச்சிராப்பள்ளி Parliamentary Constituency 2014 Election Results. Election.in. Retrieved 9 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._குமார்&oldid=3943879" இலிருந்து மீள்விக்கப்பட்டது