முதன்மை பட்டியைத் திறக்கவும்

இடி அமீன் (Idi Amin Dada, 1924ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.

இடி அமீன்
Idi Amin -Archives New Zealand AAWV 23583, KIRK1, 5(B), R23930288.jpg
உகாண்டாவின் 10 சிலிங் நாணயத்தில் இடி அமீன்
உகாண்டாவின் 3வது அதிபர்
பதவியில்
1971 – 1979
துணை குடியரசுத் தலைவர் முஸ்தபா அட்ரிசி
முன்னவர் மில்டன் ஒபாடே
பின்வந்தவர் யூசுப் லூலே
தனிநபர் தகவல்
பிறப்பு c. 1925, கொபோகோ மேற்கு நைல் மாகாணம் அல்லது
மே 17, 1928 கம்பலா
இறப்பு ஆகஸ்ட் 16, 2003
ஜெத்தா சவுதி அரேபியா
தேசியம் உகாண்டா
வாழ்க்கை துணைவர்(கள்) மதீனா உற்பட பலர்
தொழில் இராணுவ அதிகாரி
சமயம் இஸ்லாம்

உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.[1]

உகாண்டா ஆசியர்களை வெளியேற்றல்தொகு

4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டாவின் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.[2] வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர்.[3][4] வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கும், 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகழிடம் அடைந்தனர்.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடி_அமீன்&oldid=2726700" இருந்து மீள்விக்கப்பட்டது