மில்டன் ஒபாடே

அப்போல்லோ மில்டன் ஒபாடே (Apollo Milton Obote ) (28 டிசம்பர் 1925 – 10 அக்டோபர் 2005)[1] ஐக்கிய இராச்சியத்தின் கீழிருந்த உகாண்டா நாட்டிற்கு விடுதலைப் போராட்டங்கள் மூலம் 1962-இல் விடுதலைப் பெற்றுத் தந்தவர் ஆவார். இவர் உகாண்டாவின் பிரதம அமைச்சராக 1962 முதல் 1966 வரை பணியாற்றியவர். பின் 19666 முதல் 1971 முடிய உகாண்டா அதிபராக பதவியில் இருந்தவர். 1971-இல் இராணுவ அதிகாரி இடி அமீன் இராணுவப் புரட்சி மூலம் உகாண்டாவின் அதிபர் பதவியைக் கைப்பற்றினார். 1979-இல் இடி அமீனை நாட்டை விட்டு துரத்திய பிறகு 1980-இல் மில்டன் ஒபாடே மீண்டும் உகாண்டாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவரது இரண்டாவது அதிபர் ஆட்சியின் போது நீண்டகாலமாக நடைபெற்ற கொடூரமான இராணுவ நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட இராணுவப்புரட்சியால் இவர் நாடு கடத்தப்பட்டு இறந்தார்.[4]

மில்டன் ஒபாடே
உகாண்டாவின் அதிபர்
பதவியில்
ஏப்ரல் 15, 1966 (1966-04-15) – 25 சனவரி 1971 (1971-01-25)
துணை அதிபர்ஜான் பாபியா
முன்னையவர்எட்வர்டு முதேசா
பின்னவர்இடி அமீன்
பதவியில்
திசம்பர் 17, 1980 (1980-12-17) – 27 சூலை 1985 (1985-07-27)
துணை அதிபர்பௌலா முவாங்கா
முன்னையவர்அதிபர் ஆணையம்
பின்னவர்பசிலியோ ஒலாரா-ஒகேல்லோ
பிரதம அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 30, 1962 (1962-04-30) – 15 ஏப்ரல் 1966 (1966-04-15)
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபெத்து (1963 வரை)
முன்னையவர்பெனெடிட்கோ கிவானுகா
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-12-28)28 திசம்பர் 1925
அகோகோரா, உகாண்டா
இறப்பு10 அக்டோபர் 2005(2005-10-10) (அகவை 79)
ஜோகானஸ்பேர்க், தென்னாபிரிக்கா
அரசியல் கட்சிஉகாண்டா மக்கள் காங்கிரஸ்
துணைவர்மிரியா ஒபாடே
பிள்ளைகள்5

உகாண்டா புதர் போர்

தொகு

1983-இல் ஒபாடே அரசுக்கு எதிரான கொரில்லாப் போராளிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையில் வடக்கு உகாண்டாவில் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[5][5][6][7][8] இதை அடுத்து உகாண்டாவில் ஏற்பட்ட இராணுவப் புரட்சி மூலம் மில்டன் ஒபாடேவை 27 சூலை 1985 அன்று உகாண்டாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.[9]

இறப்பு

தொகு

நாடு கடத்தப்பட்ட ஒபாடே கென்யா மற்றும் ஜாம்பியா நாட்டில் சில ஆண்டுகள் அடைக்கலமாக இருந்தார். இறுதியாக மில்டன் ஒபாடே ஜோகானஸ்பேர்க், தென்னாபிரிக்கா நாட்டின் ஜோகானஸ்பேர்க் நகர மருத்துவமனையில் 10 அக்டோபர் 2005 அன்று காலமானார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Birth and death date according to the headstone inscription on his grave.
  2. Milton Obote, president of Uganda
  3. "Today in history: Obote returns, lands in Bushenyi". www.newvision.co.ug. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019.
  4. Javira, Ssebwami (2021-02-27). "Inside the life of President Milton Obote". UgStandard. Archived from the original on 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. 5.0 5.1 Ruddy Doom; Koen Vlassenroot (1999). "Kony's Message: A New Koine?". African Affairs 98 (390): 9. doi:10.1093/oxfordjournals.afraf.a008002. http://afraf.oxfordjournals.org/content/98/390/5.abstract. 
  6. Henry Wasswa (10 October 2005), "Uganda's first prime minister, and two-time president, dead at 80", Associated Press
  7. Bercovitch, Jacob and Jackson, Richard (1997), International Conflict: A Chronological Encyclopedia of Conflicts and Their Management 1945–1995. Congressional Quarterly. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56802-195-9.
  8. Uganda. CIA Factbook.
  9. "Notes On Concealment Of Genocide In Uganda", Black Star News, 11 December 2008.
  10. "Former Ugandan leader Obote dies", BBC News, 10 October 2005.

மேலும் படிக்க

தொகு
அரசியல் பதவிகள்


முன்னர்
none
தலைவர், உகாண்டா மக்கள் காங்கிரஸ் கட்சி
1959–2005
பின்னர்
மிரியா ஒபாடே
முன்னர்
பெனெடிட்கோ கிவானுகா
உகாண்டாவின் பிரதம அமைச்சர்
1962–1966
பின்னர்
ஒடேமா அல்லிமதி
பதவி ஒழிக்கப்பட்டது 1966–1980
முன்னர்
எட்வர்டு முடேசா
உகாண்டாவின் அதிபர்
1966–1971
பின்னர்
முன்னர்
உகாண்டா அதிபரின் ஆணையம்
உகாண்டாவின் அதிபர்
1980–1985
பின்னர்
டிட்டோ ஒகெல்லோ லுத்வா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்டன்_ஒபாடே&oldid=3894012" இலிருந்து மீள்விக்கப்பட்டது