ஜோகானஸ்பேர்க்

ஆள்கூறுகள்: 26°08′00″S 27°54′00″E / 26.13333°S 27.90000°E / -26.13333; 27.90000

ஜோகார்னஸ்பேக் (Johannesburg) தென்னாபிரிக்காவின் மிகப்பெரியதும் மக்கள்தொகை கூடந்துமான நகரமாகும். இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.ஜோகானர்னஸ்பேக் உலகில் 40வது பெரிய கூட்டுநகரமாகும். இது பிழையாக தென்னாபிரிக்காவின் தலை நகரமாக கருதப்படுவதுண்டு. தென்னாபிரிக்காவின் உச்சநிலை நீதிமன்றமான யாப்பு நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது.

ஜோகார்னஸ்பேக்
Johannesburg skyline from Gold Reef City
Johannesburg skyline from Gold Reef City
குறிக்கோளுரை: Unity in Development
ஜோகார்னஸ்பேக்கின் அமைவிடம்
ஜோகார்னஸ்பேக்கின் அமைவிடம்
நாடுதென்னாபிரிக்கா
மாகாணம்கௌடெங்
தொடக்கம்1886
அரசு
 • நகரத் தந்தைஆமோஸ் மசொன்டோ
பரப்பளவு
 • மொத்தம்1,644 km2 (635 sq mi)
ஏற்றம்
1,753 m (5,751 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்32,25,812
 • அடர்த்தி1,962/km2 (5,080/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (SAST)
Area code011
இணையதளம்www.joburg.org.za

கனிமவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.

தென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது 1,644 ச.கி.மீ (635 ச.மை) பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி 1,962 inhabitants per ச.கி.மீ (5,082/ச.மீ) பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும்.

இரட்டை நகரங்கள்

தொகு

ஜோகானஸ்பேர்கின் இரட்டை நகரங்கள்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Twinning agreements". Making Joburg an entry point into Africa. City of Johannesburg. Archived from the original on 11 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 28 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகானஸ்பேர்க்&oldid=3573408" இலிருந்து மீள்விக்கப்பட்டது