ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (ஆங்கிலம்: E. V. K. S. Elangovan, பிறப்பு: திசம்பர் 12, 1948) ஒர் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். முந்தைய (2004–2009) காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சருமாக இருந்தார்.[1] தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களான குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் | |
---|---|
மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் | |
பதவியில் 2004 - 2009 | |
முன்னையவர் | கே கே காளியப்பன் |
தொகுதி | கோபிச்செட்டிப்பாளையம் |
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் 1984–1988 | |
முன்னையவர் | டி. கே. சுப்ரமணியம் |
பின்னவர் | ஆர். இரங்கசாமி |
தொகுதி | சத்யமங்கலம் சட்டமன்றத் தொகுதி |
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் | |
பதவியில் 2023 | |
முன்னையவர் | திருமகன் ஈவெரா |
தொகுதி | ஈரோடு கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 21, 1948 ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | வரலட்சுமி |
பிள்ளைகள் | திருமகன் ஈவெரா, சஞ்சய் |
பெற்றோர் | தந்தை : ஈ. வெ. கி. சம்பத் தாயார் : ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் |
வாழிடம்(s) | கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா |
இளமைக் காலம்
தொகுஇவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
குடும்பம்
தொகுஇவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள். இரண்டாவது மகன் திருமகன் ஈவெரா 2023 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
அரசியல் வாழ்க்கை
தொகு- இவர் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தை சொல்லின் செல்வர் என்று தமிழக அரசியல் களத்தில் அழைக்கப்பெற்ற ஈ. வி. கே. சம்பத் அவர்கள் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தையின் நண்பரும், அன்றைய தமிழ் திரையுலக முன்னணி நடிகருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் (1977–1989) வரை ஒன்றாக பயணித்தார்.
- மேலும் அப்போது 1984 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் மேல் சிகிச்சைகாக அமெரிக்காவில் இருந்த போது இந்தியாவில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், பிரதமர் இந்திரா காந்தி பஞ்சாப் தனிநாடு கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் காலிஸ்தான் அமைப்பினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார்.
- இதனால் தமிழகத்தில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான அனுதாப ஆதரவு அலை வீசியதால் இக்கூட்டணி 1984 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் பலமான வெற்றி பெற்றது.
- இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி அதிக அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று ராஜீவ் காந்தி முதல் முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார்.
- தமிழகத்தில் அதிமுக–காங்கிரஸ் பலமான வெற்றி பெற்றது அதிமுகவில் தனிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று எம். ஜி. ஆர் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
- அத்தேர்தலில் சத்யமங்கலம் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் அரசியலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் சிவாஜி கணேசன் ஆதரவு பிரிவினராக வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்கு சென்றார்.
- அதன் பிறகு தமிழகத்தில் முதல்வர் எம். ஜி. ஆர் மரணத்திற்கு பிறகு அவரது மனைவி வி. என். ஜானகிக்கு தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி ஆதரவளிக்க மறுத்ததால் தலைவர் சிவாஜி கணேசன் வி. என். ஜானகிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய போது அவருடன் பல ஆதரவாளர்களுடன் இளங்கோவனும் வெளியேறினார்கள்.
- பின் அப்போது 1989 சட்டமன்றத் தேர்தலில் வி. என். ஜானகியின் அதிமுக (ஜா) அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்த போது அக்கட்சியின் சார்பில் ஈரோடு பவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இளங்கோவன் தோல்வியடைந்தார்.
- பின்னர் அத்தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி கணேசன் அவர்கள் தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டு அக்கட்சியில் சிவாஜி கணேசன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்த போதும் கூட இளங்கோவன் அதிலிருந்து பிரிந்து தனது தாய் கட்சியான காங்கிரசில் இணைந்து மீண்டும் செயல்பட தொடங்கினார்.
- மேலும் அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான திரு.வாழப்பாடி ராமமூர்த்தியின் பிரிவினராக தலைமை ஏற்று செயல்பட்டார்.
- அதன் பிறகு முன்னாள் பிரதமரும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தி தமிழீழம் தனிநாடு கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி மனித வெடி குண்டால் கொள்ளபட்டார்.
- பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் மத்தியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய பிரதமராக நரசிம்ம ராவும், தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வராக ஜெயலலிதாவும் முதல் முறையாக பதவியேற்றனர்.
- அப்போது ராஜீவ் காந்தி மரணத்திற்கு முழுமையான காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அவர்களுக்கு தமிழகத்தில் உதவி கரமாக இருந்த திமுகவினரையும் அக்கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.
- அதன் பிறகு 1996 நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- அத்தேர்தலின் தோல்விக்கு முன்பே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முன்னணி மூத்த தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப. சிதம்பரம் ஆகியோர் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சி உடன் முரண்பட்டு தனி கட்சி துவங்கி சென்றுவிட்டதால்.
- அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தனர்.
- இப்பதவியில் (1996–2001) ஆண்டு வரை மிகவும் திறம்பட செயல்பட்டார்.
- மேலும் அப்போது நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் மூப்பனாரின் தமாகா அக்கூட்டணியில் இணைந்ததால் தமிழக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மூப்பனாருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு கொடுத்தார்.
- 2004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (214477) வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
- பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.
- மேலும் அக்காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் மந்திரியாக இருந்த போதும் தமிழகத்தில் தனது கூட்டணி தலைமை கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு சரியான மரியாதை தராததை காரணம் காட்டி மு. கருணாநிதியை அவரது சாதியின் பெயரோடு அவரை விமர்சனம் செய்தார்.
- அன்றைய காலகட்டத்தில் (2006-2011) திமுக வெற்றி பெற்ற போதிலும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனதை வைத்து திமுக–காங்கிரஸ் கூட்டணி தயவில் ஆட்சி செய்வதை வைத்து முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சியை திறனற்ற ஆட்சி என்று கூறி கூட்டணி கட்சி என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்தார்.
- அதைவிட எதிரணியில் அதிமுக ஜெயலலிதா ஆதரவளனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
- மேலும் அப்போது மு. கருணாநிதியின் எதிர்ப்பை கையில் எடுத்த தேமுதிக கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்களை பாராட்டி இளங்கோவன் அவரை வீடு தேடி சென்று இனிப்பூட்டி மகிழ்ந்தார்.
- மேலும் அன்றைய காலகட்டத்தில் தான் இலங்கையில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக செயல்பட்டார்.
- அதே எதிர்ப்பு நிலைபாட்டில் எதிரணியில் அதிமுகவில் அடுத்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர விரும்பி அவரது ஆதரவு நிலைபாட்டை எடுத்தாலும் அந்த நேரத்தில் ஜெயலலிதா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலைபாட்டை எடுத்தது. இளங்கோவன் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே அரசியல் களத்தில் பலமான எதிர்ப்பு நிலை உருவானது.
- அதன் பிறகு நடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் இளங்கோவன் தோல்வி அடைந்ததற்கு காரணமே அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவில் முதல்வர் மு.கருணாநிதியை கூட்டணி கட்சி என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்தார்.
- அதே சமயம் எதிர்கட்சியான அதிமுகவில் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்ததாலே தமிழக மக்களிடையே பெரியார் வீட்டு பேரன் என்ற நல்ல பெயர் இருந்த போதிலும் இளங்கோவன் தமிழகத்தின் அன்றைய இரு பெரும் மக்கள் ஆதர்ச தலைவர்களான கருணாநிதி/ஜெயலலிதாவையும் அரசியல் நாகரிகம் கடந்து தரம் தாழ்ந்து பேசியதாலே தமிழக மக்கள் மத்தியில் இளங்கோவன் போட்டியிட்ட இரண்டு தேர்தலிலும் தொடர் தோல்வியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
- பிறகு (2014–2017) வரை காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று கொண்டார்.
- பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 41 தொகுதிகளை அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியிடம் மிகவும் கட்டாயம் செய்து வாங்கினார்.
- அதைவிட அப்போது தேர்தல் காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்து தவறாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய சர்ச்சை தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் காங்கிரசுடன் இணைந்து திமுகவும் அத்தேர்தலில் தொடர் தோல்வி அடைவதற்கு இவரே காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
- அதே எதிர்ப்பு மனநிலையில் இருந்த தமிழக மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தவர் என்ற காரணத்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அடுத்து நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டும் அவரை தோல்வியடைய செய்தனர்.
- அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் எதிர்பாராத மரணத்தை தழுவினார் பின் அவர் விட்டு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார்.
- அத்தேர்தலில் எதிரணியில் அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசுவை 42 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் தாேற்கடித்தார்.
போட்டியிட்ட தேர்தல்கள்
தொகுஆண்டு | தொகுதியின் பெயர் | மக்களவை / சட்டமன்றம் | முடிவு |
---|---|---|---|
1984 | சத்யமங்கலம் சட்டமன்றத் தொகுதி | சட்டமன்றம் | வெற்றி |
1989 | பவானி சட்டமன்றத் தொகுதி | சட்டமன்றம் | தோல்வி |
1996 | கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2004 | கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2009 | ஈரோடு மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2014 | திருப்பூர் மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2019 | தேனி மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் | ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி | சட்டமன்றம் | வெற்றி |
வகித்த பதவிகள்
தொகு- தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர் (தற்போதும் உள்ளார்)
- அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
- தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர்,
- தமிழக காங்கிரஸ் தலைவர்
- தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்
- மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elangovan,Shri E.V.K.S." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)