இந்தியப் பொதுத் தேர்தல், 1996

(இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினோராவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆளும் இந்திய தேசிய காங்கிரசு தோல்வியடைந்தது. ஆனால் எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதலில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிகாரி வாச்பாய் பிரதமரானார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால் 13 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் மாநிலக் கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முன்னணியின் தேவகவுடா காங்கிரசின் ஆதரவுடன் பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1996

← 1991 ஏப்ரல் 27, மே 2 மற்றும் 7, 1996 1998 →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  Second party Third party
  Atal Bihari Vajpayee tribute image (cropped).jpg Visit of Narasimha Rao, Indian Minister for Foreign Affairs, to the CEC (cropped)(2).jpg
தலைவர் அடல் பிகாரி வாச்பாய் பி. வி. நரசிம்ம ராவ்
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி பாஜக கூட்டணி காங்கிரசு
தலைவரின் தொகுதி லக்னவ் பெர்ஹாம்பூர்
வென்ற தொகுதிகள் 161 140
மாற்றம் Green Arrow Up Darker.svg41 Red Arrow Down.svg92
மொத்த வாக்குகள் 67,950,851 96,455,493
விழுக்காடு 20.29% 28.80%

Lok Sabha Zusammensetzung 1996.svg

முந்தைய இந்தியப் பிரதமர்

பி. வி. நரசிம்ம ராவ்
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

அடல் பிகாரி வாச்பாய் (பாஜக)
தேவகவுடா
ஐக்கிய முன்னணி

பின்புலம்தொகு

இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆட்சியில் இருந்த பி. வி. நரசிம்ம ராவ் அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் ஆக உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாயை அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட வாஜ்பாய்க்கு 13 நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் பாஜகவை மதவாத கட்சி என்ற தவறான பார்வையால் அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. வாஜ்பாய் பதவி விலகினார். அதன் பிறகு எதிர் கட்சியான காங்கிரசுக்கும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி. ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க வைத்தனர். இக்கூட்டணிக்கு காங்கிரசு (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவரும் அன்றைய கர்நாடக மாநில முதல்வருமான தேவகவுடா தேர்ந்தெடுக்கபபட்டார்.

முடிவுகள்தொகு

கட்சி % இடங்கள்
பாஜக 20.29 161
பாஜக கூட்டணிக் கட்சிகள்
சமதாக் கட்சி
சிவ சேனா
ஹிமாச்சல் முன்னேற்றக் கட்சி
4.01
2.17
1.49
0.35
26
8
15
3
காங்கிரசு 28.8 140
தேசிய முன்னணி
ஜனதா தளம்
சமாஜ்வாதி கட்சி
தெலுங்கு தேசம்
14.33
8.08
3.28
2.97
79
46
17
16
இடதுசாரி முன்னணி
சிபிஎம்
சிபிஐ
புரட்சிகர சோசலிசக் கட்சி
ஃபார்வார்டு ப்ளாக்
9.10
6.12
1.97
0.63
0.38
52
32
12
5
3
தமாக 2.19 20
திமுக 2.14 17
பகுஜன் சமாஜ் கட்சி 4.02 11
மற்றாவை
அகாலி தளம்
அசாம் கன பரிசத்
திவாரி காங்கிரசு
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
மத்திய பிரதேச முன்னேற்றக் காங்கிரசு
சிக்கிம் ஜனநாயக முன்னணி
ஐக்கிய கோவர்கள் ஜனநாயகக் கட்சி
கேரள காங்கிரசு (மணி)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
கர்நாடக காங்கிரசு கட்சி
மகாராஷ்டிரவாடி கோமாந்தக் கட்சி
4.23
0.76
0.76
1.46
0.23
0.10
0.05
0.10
0.04
0.03
0.11
0.38
0.17
0.04
28
8
5
4
2
1
1
1
1
1
1
1
1
1
வெற்றி பெறாத கட்சிகள் 4.61 0
சுயெட்சைகள் 6.28 9
நியமிக்கப்பட்டவர்கள் 2
மொத்தம் 100.00% 545

தேர்தலுக்குப் பின் உருவான கூட்டணி ஆட்சி நிலவரம்:

அரசமைத்த கூட்டணி
ஐக்கிய முன்னணி (192)
காங்கிரசு (வெளியிலிருந்து அதரவு) (140)
மொத்தம்: 332 உறுப்பினர்கள்(61.1%)

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு