த. ரா. பாலு

இந்திய அரசியல்வாதி
(டி. ஆர். பாலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு (டி. ஆர். பாலு, பிறப்பு: சூன் 15, 1941) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

த. இரா. பாலு
The Union Minister for Shipping, Road Transport and Highways, Shri T. R. Baalu addressing at a Conference of the Ministers in charge of National Highways of all the StatesUTs, in New Delhi on June 24, 2008.jpg
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2019-தற்போது வரை
பிரதமர் நரேந்திர மோதி
தொகுதி ஸ்ரீபெரும்புதூர்
கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்
பதவியில்
2004-2009
பிரதமர் மன்மோகன் சிங்
தொகுதி தென் சென்னை
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
பதவியில்
1999-2004
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தொகுதி தென் சென்னை
பெட்ரோலிய துறை அமைச்சர்
பதவியில்
1996-1998
பிரதமர் தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
தொகுதி தென் சென்னை
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009-2013
தொகுதி ஸ்ரீபெரும்புதூர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996-2009
தொகுதி தென் சென்னை
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1986-1992
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூன் 1941 (1941-06-15) (அகவை 81)
தளிக்கோட்டை, திருவாரூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ரேனுகா தேவி
டி. ஆர். பி. பொற்கொடி
பிள்ளைகள் ஆர். பி. ராஜ்குமார்
டி. ஆர். பி. ராஜா
செல்வகுமார் பாலு
மற்றும் இரு மகள்கள்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சமயம் இந்து
இணையம் https://www.trbaalu.in
As of 26 மே, 2019

வாழ்க்கை வரலாறுதொகு

இவர் சூன் 15, 1941 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள மைய பல்தொழில் நுட்பப் பயிலத்தில் தொழிற்கல்வியும், பின்னர் புதுக்கல்லூரியில் பி. எஸ். சி படிப்பையும் படித்து முடித்தார்.

இவருக்கு ரேனுகா தேவி மற்றும் டி. ஆர். பி. பொற்கொடி என இருமனைவிகளும், ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு என மூன்று மகன்களும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கைதொகு

இவர் தன்னுடைய பதினாறாம் வயதில் திமுகவில் இணைந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் பெட்ரோலிய துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

போட்டியிட்ட தேர்தல்களும், வகித்த பதவிகளும்தொகு

ஆண்டு தொகுதி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
1996 தென் சென்னை வெற்றி 61.97 எச். கணேசம் அதிமுக 22.95[1]
1998 தென் சென்னை வெற்றி 48.17 ஜன கிருஷ்ணமூர்த்தி பாஜக 45.94[2]
1999 தென் சென்னை வெற்றி 60.03 வி. தண்டாயுதபானி இந்திய தேசிய காங்கிரசு 34.39[3]
2004 தென் சென்னை வெற்றி 60.41 சையது பதர் அதிமுக 36.79[4]
2009 ஸ்ரீபெரும்புதூர் வெற்றி 44.41 ஏ. கே. மூர்த்தி பாமக 41.26[5]
2014 தஞ்சாவூர் தோல்வி 36.17 கு. பரசுராமன் அதிமுக 50.41[6]
2019 ஸ்ரீபெரும்புதூர் வெற்றி 56.4 வைத்திலிங்கம் பாமக 20.3
 • 1986–1992 : மாநிலங்களவை உறுப்பினர்
 • 1996: 11வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை)
 • 1996-1998: பெட்ரோலியத் துறை அமைச்சர்
 • 1998: 12வது மக்களவை உறுப்பினர் (இரண்டாம் முறை)
 • 1999: 13வது மக்களவை உறுப்பினர் (மூன்றாவது முறை)
 • 1999-2003: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
 • 2004: 14வது மக்களவை உறுப்பினர் (நான்காவது முறை)
 • 2004-2009: கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்
 • 2009: 15வது மக்களவை உறுப்பினர் (ஐந்தாவது முறை)[7]
 • 2019: 17வது மக்களவை உறுப்பினர் (ஆறாவது முறை)

மேற்கோள்கள்தொகு

 1. "Statistical report on General elections, 1996 to the 11th Lok Sabha" (PDF). Election Commission of India. 1996. p. 387. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Statistical report on General elections, 1998 to the 12th Lok Sabha" (PDF). Election Commission of India. 1998. p. 234. 20 அக்டோபர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Statistical report on General elections, 1999 to the 13th Lok Sabha" (PDF). Election Commission of India. 1999. p. 225. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Statistical report on General elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. 2004. p. 281. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Statistical report on General elections, 2009 to the 15th Lok Sabha" (PDF). Election Commission of India. 2009. p. 124. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Statistical report on General elections, 2014 to the 16th Lok Sabha". Election Commission of India. 2014. 25 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Political Career". Parliament of India. National Informatics Centre. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ரா._பாலு&oldid=3556884" இருந்து மீள்விக்கப்பட்டது