சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)

இந்திய அமைச்சரவையில் உள்ள ஓர் முக்கிய துறை ஆகும்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும். சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளில் இதர மத்திய அமைச்சகங்கள், மாநில/ஒன்றியப் பகுதி அரசுகள், அமைப்புகள், சாலைத்திட்டங்கள் மற்றும் தனிநபர்களிடம் கலந்தாலோசித்து, நாட்டின் சாலை அமைப்பின் செயல்திறன் மற்றும் இடப்பெயர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கவும், நிர்வகிக்கவும் உச்ச அமைப்பாகும். இவ்வமைச்சகத்தில் சாலைப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு என்ற இருபிரிவுகள் உள்ளன.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
வலைத்தளம்www.morth.nic.in

சாலைப் பிரிவு

தொகு

தேசிய நெடுஞ்சாலைகளை கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:

 • தேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிட்டு, உருவாக்கி, பராமரித்தல்.
 • மாநில சாலைகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேவான சாலைகள் விரிவாக்கத்திற்கு மாநிலங்களுக்கு நுட்பரீதியாகவும், நிதிரீதியாகவும் உதவுதல்
 • நாட்டின் சாலைகள் மற்றும் பாலங்களின் தரநிர்ணயத்தை முடிவுசெய்தல்
 • நாட்டின் சாலைகள் மற்றும் பாலங்களின் தொழினுட்பக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.

போக்குவரத்துப் பிரிவு

தொகு

சாலைப் போக்குவரத்து விசயங்களைக் கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:

 • மோட்டார் வாகனச் சட்டமியற்றல்
 • மோட்டார் வாகனச் சட்டம், 1988யை நிர்வகித்தல்
 • மோட்டார் வாகனங்களுக்கு வரிவிதித்தல்
 • சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டம், 1950 யை நிர்வகித்தல்
 • மோட்டார் போக்குவரத்தில் போக்குவரத்து கூட்டுறவை வளர்த்தல்
 • சாலைப் பாதுகாப்பு தரநிர்ணயங்களை தேசிய கொள்கைகளாகத் தயாரித்து, ஆண்டு சாலை பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தல்
 • சாலை விபத்துப் புள்ளிவிபரங்களைச் சேகரித்து, ஆய்ந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இதர பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தல்
 • விதிமுறைகளுக்கு ஏற்ப அரசுசாரா நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்குதல்.

அமைச்சகத்தின் இதர அமைப்புகள்

தொகு