மைய பல்தொழில் நுட்பப் பயிலகம்

மைய பல்தொழில் நுட்பப் பயிலகம்
குறிக்கோள் வாசகம் உழைப்பே எப்போதும் வெல்லும்
தொடக்கம் 1914
பள்ளி வகை வேளாண் அறிவியல்
அமைவிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம் 45 எக்டர்
இணைய முகவரி தஞ்சாவூர்

மைய பல்தொழில் நுட்பப் பயிலகம் (Central Polytechnic) சென்னை தரமணியில் அமைந்திருக்கும் பல்தொழில் நுட்பக் கல்லூரியாகும்.

வரலாறு

தொகு
 
மைய பல்தொழில் நுட்பப் பயிலகம்

1914 ஆம் ஆண்டு மைய பல்தொழில் நுட்பப் பயிலகம் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் இது வாடகை கட்டிடத்தில் மதராஸ் டிரேடு பள்ளி என்ற பெயரில் மண்ணடியில் இயங்கியது. பின் 1924 ஆம் ஆண்டு அதன் சொந்த கட்டிடத்துக்கு மாறியது. 1946 ஆம் வருடம் பயிலகத்தின் பெயர் மைய பல்தொழில் நுட்பப் பயிலகம் என்று மாற்றப்பட்டது. அப்பொழுது 1. இயந்திரவியல் 2. கட்டிடவியல் 3. மின்னியல் 4. மீனியல் 5. அச்சி தொழில் நுட்பம் 6. சனிடரி 7. ஒளிப்பதிவு மற்றும் ஒலி தொழில் நுட்பம் போன்ற 7 பட்டயப் படிப்புகளை வழங்கியது. 1958-59 ஆம் ஆண்டு இரண்டாம் 5 ஆண்டு திட்டத்தின் படி கிண்டியில் 15 ஏக்கர் பரப்பில் 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு மாறியது. அவ்வாண்டு பயிலகத்தில் இருந்து அச்சு தொழில் நுட்பவியல் பிரிக்கப்பட்டு பிராந்திய அச்சு பள்ளி என்ற பெயரில் தனி பயிலகம் ஆரம்பிக்கப்பட்டது. 1960-61 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு மற்றும் ஒலி தொழில் நுட்பம் பயிலகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திரைப்பட தொழில்நுட்ப நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்றாம் 5 ஆண்டு திட்டப்படி பயிலக விரிவாக்க பணிக்காக கிண்டியில அமைந்த மையத்தில் இடவசதி இல்லாததால் அடையாரில் 40 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 72 லட்சம் செலவில் புது கட்டிடங்கள் கட்டப்பட்டது. பின் இந்த மையத்துக்காக 3221 எக்டர் நிலம் பிற பயிலகத்துக்காக கையகப்படுத்தப்பட்டது.

பயிலகத்தில் உள்ள துறைகள்

தொகு
  1. இயந்திரவியல்
  2. கட்டிடவியல்
  3. மின்னியல் மற்றும் மின்னணுவியல்
  4. கணினியியல்
  5. மீனியல்
  6. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
  7. இயந்திரவியல் (தொழில் பயிற்சியுடன்)

வெளி இணைப்புகள்

தொகு