சர்தார் உஜ்ஜல் சிங்

இந்திய அரசியல்வாதி

சர்தார் உஜ்ஜல் சிங் (Sardar Ujjal Singh, திசம்பர் 27, 1895 – பெப்ரவரி 15, 1983) பஞ்சாப் மாநில ஆளுநராகவும் (செப்டம்பர் 1, 1965 - சூன் 26, 1966), பின்னர் தமிழக ஆளுநராகவும் (28.06.1966 -16.06.1967) பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2][3] இவற்றிற்கு முன்னதாக இவர் முதல் சுற்று வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். இவரது அண்ணன் சோபா சிங் ஓர் கட்டிட கட்டமைப்பாளராக 1911-1930 காலத்தில் புது தில்லியின் கட்டமைப்பில் முதன்மை ஒப்பந்தப் புள்ளிக்காரராகப் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தந்தையின் உடன்பிறந்த தம்பி ஆவார்.[4]

மேற்சான்றுகள்

தொகு
  1. Indian states since 1947, (Worldstatesmen, 16 September 2008)
  2. Governors of Tamil Nadu since 1946 பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (Tamil Nadu Legislative Assembly, 15 September 2008)
  3. "Past Governors". ராசபவன் சென்னை, Official website.
  4. [1]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_உஜ்ஜல்_சிங்&oldid=3423117" இலிருந்து மீள்விக்கப்பட்டது