இரண்டாம் விருபக்ஷ ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இரண்டாம் விருபக்ஷ ராயன் (கி.பி. 1465-1485) விஜயநகரப் பேரரசை 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் சங்கம மரபினன்.
இவன், தனக்கு முன்னிருந்த மல்லிகார்ஜுன ராயனை ஆட்சியிலிருந்து அகற்றி அரசைக் கைப்பற்றினான். மல்லிகார்ஜுன ராயன் திறமையற்ற, ஊழல் மலிந்த அரசனாக இருந்ததுடன், பேரரசின் எதிரிகளுடன் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்தான். எனினும், இரண்டாம் விருபக்ஷ ராயனும், முன்னவனை விடச் சிறந்தவனாக இருக்கவில்லை. [1]
தோல்விகள்
தொகுதனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் வலுவின்மையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் கொங்கணம் கரையோரப் பகுதிகளை பஹமானி அரசிடம் இழந்தான். பஹமானி சுல்தான் மூன்றாம் முஹம்மத் ஷா அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் கோவா உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பஹமானி சுல்தான், கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் புருஷோத்தம கஜபதி, எல்லைக்குள் புகுந்து திருவண்ணாமலையைப் பிடித்தான். இத் தோல்விகள் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.
இறப்பு
தொகுஇந் நிலை, 1485 இல், விருபக்ஷ ராயன் தனது சொந்த மகனான பிரௌத ராயன் கையாலேயே கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது.