வேலூர்க் கோட்டை

vellore fort history

வேலூர்க் கோட்டை (Vellore Fort) 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.

வேலூர்க் கோட்டை
பகுதி: தமிழக வரலாறு, ஆந்திரப் பிரதேச வரலாறு, விஜயநகரப் பேரரசு, தென்னிந்திய வரலாறு, இந்திய விடுதலை இயக்கம்
வேலூர்
Vellore fort
வேலூர்க் கோட்டை
வேலூர்க் கோட்டை is located in தமிழ் நாடு
வேலூர்க் கோட்டை
வேலூர்க் கோட்டை
வகை கொத்தளக் கோட்டையும் தொகுதியும்
இடத் தகவல்
உரிமையாளர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 1566
பயன்பாட்டுக்
காலம்
தற்போதுவரை
கட்டியவர் பொம்மி நாயக்கர் , திம்மி நாயக்கர்
கட்டிடப்
பொருள்
கருங்கல்
சண்டைகள்/போர்கள் தோப்பூர் சண்டை, கர்நாடகப் போர்கள்
நிகழ்வுகள் வேலூர் சிப்பாய் எழுச்சி
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தானகம், பிரித்தானிய இந்தியா

அமைப்பு

தொகு

கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.

சிறப்பு

தொகு

இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.[1] மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் 1999 ஏப்ரல் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.

உருவாக்கம்

தொகு

விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வரலாறு

தொகு

நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் , திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்,இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின்[2] குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. தொகுப்பாசிரியர் பொய்கை.வெ.ஆனந்த சுந்தரராஜன், வேலூர்க்கோட்டை அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு, ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம், வேலூர், ஐந்தாம் பதிப்பு, 2012, ப.18
  2. "When the Vellore sepoys rebelled". The Hindu. 6 August 2006 இம் மூலத்தில் இருந்து 2006-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061202074724/http://www.hindu.com/mag/2006/08/06/stories/2006080600360400.htm. பார்த்த நாள்: 2013-10-10. 

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்க்_கோட்டை&oldid=3820762" இலிருந்து மீள்விக்கப்பட்டது