வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர்க் கோட்டை, வேலூர் அரசு அருங்காட்சியகம், அறிவியல் பூங்கா, வைனுபாப்பு விண்வெளி ஆய்வு மையம், அமிர்தி உயிரியல் பூங்கா, மதம் சார்ந்த இடங்களான ஜலகண்டேசுவரர் ஆலயம், ஸ்ரீபுரம் பொற்கோயில், பெரிய மசூதி, செயிண்ட் ஜான் தேவாலயம், ஜலகம்பாறை அருவி, ஏலகிரிமலை கோடைவாழிடம் ஆகியன வேலூரிலும் [1]அதைச் சுற்றியுமுள்ள சுற்றுலாத் தலங்களாகும்

வேலூர்க் கோட்டைதொகு

16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வேலூர்க் கோட்டை வேலூருக்கு இன்றும் அழகும் பெருமையும் சேர்க்கின்றது. சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் வேலூரின் மையப்பகுதியில் இக்கோட்டை அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் இத்தரைக் கோட்டைக் கட்டப்படுள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள மதில்கள், அகழி முதலியன கோட்டைக்கு அழகு சேர்க்கின்றன. கோட்டையைச் சுற்றிலும் உள்மதில் சுவர், வெளிமதில் சுவர் என இரண்டு சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் தென்பகுதியில் பசுமையான பூங்கா ஒன்று அமைந்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் எழில்மிக்க தூண்களாலும் சிற்பங்களாலும் ஆக்கப்பட்ட அழகிய மண்டபம் உள்ளது இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி இக்கோட்டையில்தான் நடைபெற்றது[2] .

 
வேலூர்க் கோட்டை

இராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கோட்டையாக இது காட்சியளிக்கின்றது. கோட்டைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மகால் ஆகிய அழகிய அரண்மனைகளும் ஜலகண்டேசுவரர் ஆலயம், தேவாலயம், மசூதி, அரசு அருங்காட்சியகம், பல அரசு அலுவலகங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் உள்ள இக்கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாத்துக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகின்றது.

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தொகு

 
"ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில்”

வேலூர்க் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் உள்ளது. பிரமிப்பூட்டும் தோற்றத்தில் அழகுடனும் கலை அம்சத்துடனும் உள்ள இக்கோயிலில் கண்கவர் ஓவியங்களும்,சிற்பங்களும் அமையப்பெற்றுள்ளன. ஆண்டு முழுவதும் அனைத்து விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஜலகண்டேஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் திறமையான சிற்பிகளால் வடிக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களின் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறையவே கோயில் முழுவதும் உள்ளது. நுழைவு வாயில் தாழ்வாரச் சிற்பங்கள் சுற்றுலா பயணிகளால் பாராட்டப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தெய்வச் சிலை இல்லாமல் இருந்து பிறகு கொண்டு வரப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

அருங்காட்சியகம்தொகு

 
சிலைகள்
 
ஆயுதங்கள்

அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. பொது மக்களுக்காக 1985 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. எல்லா வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இதனுள் தொல்லியல் கலைப்பொருட்கள், வரலாற்றுக்கு முந்தைய ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல சிற்பங்கள், மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயங்கள், தாவரவியல், நிலவியல் மற்றும் விலங்கியல் சார்ந்த பொருட்கள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன. மானிடவியல், கலை, தொல்லியல், தாவரவியல், புவியமைப்பியல், நாணயவியல், விலங்கியல் முதலிய துறைகளுக்கு அன்றும் இன்றும் அருங்காட்சியகம் கருவூலமாகத் திகழ்கிறது.

இங்குள்ள படக்காட்சியகத்தில் வட ஆற்காடு மாவட்டம் தொடர்பான வரலாற்று நினைவு சின்னங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தந்தத்தால் செய்யப்பட்ட சதுரங்கப் பலகை, இலங்கை நாணயங்கள், பல்லவ மற்றும் விஜயநகர காலத்தைய கற்சிற்பங்கள் முதலியன சிறப்பம்சங்களாகும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் படித்தல் போன்ற கலைசார் கல்வி நடவடிக்கைகளும் இங்கு மேற் கொள்ளப்படுகின்றன.

ரத்தினகிரி முருகன் கோயில்தொகு

வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரத்தினகிரி மலை உச்சியில் பாலமுருகன் கோயில் உள்ளது.பாலமுருகனடிமை சுவாமிகள் இக்கோயிலைக் கட்டி நிர்வகித்து வருகிறார். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் முருகனின் அருளாலும், பாலமுருகனடிமை சுவாமிகளின் அருளாலும், பக்தர்களின் அருளாலும் ஒளிர்வதாக நம்பப்படுகிறது.காலை ஆறு மணி முதல் மாலை எட்டு மணி வரையிலும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். தேவர்களின் கடவுளாக நம்பப்படும் முருகன் ரத்தினகிரியில் வாழ்ந்து அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்[3]

பொற்கோயில்தொகு

பொற்கோயில்
லட்சுமி
-Vellore city limit-
 
ஸ்ரீபுரம்
Country  இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர் மாவட்டம்

வேலூரின் தென் முனையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலைக்கோடி என்னுமிடத்தில் ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஸ்ரீநாராயணி பீடத்தால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ 600 கோடி செலவிடப்பட்டு 55000 சதுர அடி கோயிலாக இது கட்டப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத் தகடுகள் இக்கோயில் முழுவதும் வேயப்பட்டுள்ளது [4]. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோர் கண்ணை கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும். தற்பொழுது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் உள்ள சந்நிதி பெருமாளுக்கும் தனி கற்கோயிலாக உருவாக்கப்படுகின்றது முருகன் கோயில், காங்கேயநல்லூர். கோட்டையிலிருந்து 5கிமீ தொலைவில் காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் முருகன் கோயில் உள்ளது. [5].

அமிர்தி உயிரியல் பூங்காதொகு

அமிர்தி உயிரியல் பூங்கா
 
அமிர்தி காடு
திறக்கப்பட்ட தேதி1967
இடம்வேலூர், தமிழ் நாடு, இந்தியா
பரப்பளவு25 ha (62 ஏக்கர்கள்)
அமைவு12°43′57″N 79°03′24″E / 12.732363°N 79.056673°E / 12.732363; 79.056673ஆள்கூறுகள்: 12°43′57″N 79°03′24″E / 12.732363°N 79.056673°E / 12.732363; 79.056673
இணையத்தளம்amirthizoologicalpark

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் அமிர்தி உயிரியல் பூங்கா காணப்படுகிறது. இப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 16 மைல் அல்லது 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது.

நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி கண்களைக் கொள்ளை கொள்ளும். சுற்றுலாப் பயணிகளின் வருகை விடுமுறை நாள்களில் மட்டும் அதிகமாக உள்ளது. இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள்,மயில்கள்,முதலைகள்,காட்டுப் பூனைகள்,கழுகுகள், வாத்துகள்,புறாக்கள்,காட்டுக் கிளிகள்,முயல்கள், மற்றும் மலைப்பாம்புகள் முதலியன வாழ்ந்து பூங்காவை அழகாக்குகின்றன [6][7]

டெல்லி கேட் (வேலூர்)தொகு

ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு உயர்ந்த நுழைவுவாயில் டெல்லி கேட் என்றழைக்கப்படுகிறது. 1751ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது. [8] இது ஆற்காட்டின் ஒரு பகுதியாகும். ஆற்காடு கோட்டையின் பிரதான நுழைவாயிலாக இது விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் முகலாய ஆளுநரான டாட் கான் பன்னியின் கட்டடத்தின் ஒரு பகுதியாக இந்த வாயில் இருந்தது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vellore Fort
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு