ஜலகம்பாறை அருவி

திருப்பத்தூர் மாவட்டம்,, ஏலகிரி மலையினில் உள்ள அருவி

ஜலகம்பாறை அருவி என்பது திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம், ஏலகிரி மலையினில் சடையனூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஜலகம்பாறை அருவியின் ஒரு தோற்றம்

திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தொலைவில் சடையனூர் உள்ளது. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்தும் மலைத்தடம் வழியே சுமார் 6 கி.மீ கீழிறங்கினால் அருவியை அடையலாம். இவ்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமைவிடம்

தொகு

ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சலகம்பாறை அருவி உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறானது, சடையனூரில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.

மலையில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் காணப்படுதால் இவ்வருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மக்களும் வந்து நீராடிச்செல்கின்றனர்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலகம்பாறை_அருவி&oldid=3616048" இலிருந்து மீள்விக்கப்பட்டது